Posts

நாகர்கள் என்பவர்களும், திராவிடர்களும் ஒன்றுதான்

Who are the untouchables? Why are they untouchables?   அந்தப் புத்தகத்தை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம் . அதில் அவர் சொல்வார் , திராவிடர்கள்   இந்தியா   முழுவதும்   இருந்தார்கள்   என்பதற்கு   அடையாளம் என்னவென்றால் ,  நாகர்கள்   என்பவர்களும் ,  திராவிடர்களும்   ஒன்றுதான் . நாகர்கோவில் , நாகமங்கலம் , நாகப்பட்டினம் - நாகர் , நாகர்கள்தான் . நாகர்கோவில் என்றால் , நாகராஜா கோவில் என்று பிறகு இவர்கள் திருத்திவிட்டார்கள் . நாகர்களுக்கு என்ன மொழி என்றால் , தமிழ் மொழி . திராவிட மொழி . கலாச்சாரம் அவர்களுக்குத் தமிழ்க் கலாச்சாரம்தான் . ஒரே ஒரு கேள்வியை குருமூர்த்தி அய்யரிடம் கேட்கி றோம் , அதற்கு அவர் பதில் சொல்லட்டும் . ஒரு பார்ப்பனரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக்கூடிய துணிச்சல் இருந்ததா ? மத்தியில் காங்கிரசுக்கு மாற்று தேவை என்று சொன்ன பொழுது , ஒரு பார்ப்பனரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக்கூடிய துணிச்சல் இருந்ததா ? யாரை தேடித் தேடிப் பிடித்தார்கள் ? ஒரு மோடியைத்தான் தேடிப் பிடித்தார்கள் ...