டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - பகுதி -6
தொழிலாளர் நலத்தில் ... டாக்டர் நாயர் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண விரும்பி - அதில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வேண்டுமென விரும்பி ஆற்றிய பணிகளில் - தொழிலாளர்களுக்கு அவர் ஆற்றிய பணி மிகவும் குறிப்பிடத்தக்கது . மனிதப்பற்று உள்ளவரான டாக்டர் நாயர் இந்தியத் தொழிலாளர்களின் இடர்ப்பாடுகளை நுணுகி ஆராய்ந்து - அதற்காக இரக்கம் கொண்டவர் . நாயர் இங்கிலாந்தில் இருந்த காலத்திலேயே ஆர்தர் ஆண்டர்சன் ( Arthen Henderson ) போன்ற தொழிற்சங்கத் தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார் . இதனால் தொழிலாளர் பிரச்சினையிலும் அவருக்குத் தெளிவான கருத்து இருந்தது மிகுந்த ஈடுபாடு இருந்தது எனலாம் . தொழிலாளர் , முதலாளிகள் பற்றி டாக்டர் நாயர் கொண்டிருந்த கருத்து இது : தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் என்பது முதலாளிகளின் வாழ்க்கைத் தரத்திற்கு இணையானதாக இருக்க வேண்டும் . 1908 ஆம் ஆண்டில் தொழிலாளர் ஆணைக்குழுவின் உறுப்பினராக டாக்டர் நாயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் . இக்குழுவுடன் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணமிட்டு , தொழிலாளர்களின் ...