Posts

Showing posts with the label ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

திராவிடத்தால் எழுந்தோம்

உலக மக்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடிய உன்னத இனம் தமிழ் இனம் . காரணம் , அது உலக நாகரிகங்களுக்கும் , வாழ்வியலுக்கும் வழிகாட்டியது . தன்னிகரற்று வாழ்ந்து காட்டியது . மூடநம்பிக்கை சிறிதும் கலவா பகுத்தறிவு பாதையில் , மான உணர்வுடன் , வீரம் செறிந்த , விருந்தோம்பிய , நன்றிமறவா , மனிதநேய வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் . உலக மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ் . அதிலிருந்தே அனைத்து மொழிகளும் உருப்பெற்றன . உலகில் செல்ல முடியும் பரப்பெல்லாம் வெல்ல முடியும் என்று காட்டி , உலகின் பெரும் பகுதியில் பரவி வாழ்ந்து , பல்வேறு உயர் எச்சங்களை இந்த உலகிற்கு விட்டுச் சென்றவர்கள் தமிழர்கள் . மொஹஞ்சதாரோ , ஹரப்பாவும் எகிப்து பிரமிடுகளும் அவர்களின் எச்சங்களில் முதன்மையானவை . உலகத் தமிழனுக்கும் தமிழுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டது என்னும் உயர்நிலை பெற்றிருந்த தமிழர் வாழ்வும் , தமிழ் மொழியும் தன்னிலை இழந்து தாழ்ந்து , வீழ்ந்தது ஆரியத்தால் என்பதை இந்நூலின் தொடக்கத்தில் சுருக்கமாகப் பார்த்தோம் . அடுத்து இந்த வீழ்வு திராவிடத்தால் , பெரியாரால் ...