அண்ணா கண்ட தியாகராயர்!, - part - 2

பார்ப்பன அன்பர்களுக்கு...

பார்ப்பனர்கள்ஆதிக்கத்தோடு இருந்த காலத்தில் நம்முடைய சிறுவர்கள் பல இடுக்கண்களிடையே படிப்புப்பெற முடியாமலிருந்ததுஅதைப் பயன்படுத்திஅவர்கள்தான் அதிகமாகப் படித்து வந்தார்கள்பிராமண நண்பர்கள் நம்மைப்பார்த்து உங்கள் மாணவர்களே இனி படிக்கட்டும்நாங்கள் வேறு வேலையிலே ஈடுபடுகிறோம் என்று சொல்லுவார்களா?

பிராமண நண்பனே...

நீ இப்படிச் சொல்லிப்பார்பார்க்கலாம்இப்படிச் சொல்லுவாயாசொல்லமாட்டாயேபல ஆண்டுகளாக நாங்கள் படித்தது போதும்வேத ஆகமங்களைக் கற்கப்போகிறோம்வருங்காலத்திலே அதற்கு நல்ல மதிப்பை நாங்கள் உண்டாக்கப் போகிறோம் என்று வேத ஆகமம் படிப்பதிலே நாட்டம் செலுத்துவதுதானேஇனி வேத ஆகமத்துக்கு நாட்டிலே மதிப்பு ஏற்படுமோ ஏற்படாதோ என்ற பயமா உனக்குகல்லூரிகளிலே உனக்குத் தக்க இடமில்லாததற்காக சிஆருக்கு (சிஇராசகோபால ஆச்சாரியார் என்ற ராஜாஜிதூது அனுப்புகிறாய்சர்.அல்லாடி கிருட்ணசாமியைத் தேடி அலைகிறாய்ஜவஹர்லால் நேருவுக்குத் தந்தி கொடுக்கலாமா என்கிறாய்பதற்றத்துடன் வல்லபாய் படேலை நாடுகிறாய்.

இப்படியெல்லாம் நீ தூதுபோய் என்ன சாதித்துவிட முடியும்மேலிடத்துக்குத் தூது சென்றுதான் பாரேன்வேண்டுமானால் இந்து பத்திரிகையிலே கல்வியும் பதவிகளும் (நுனரஉயவடி யனே நுஅயீடடிலஅநவேஎன்று தலையங்கம் எழுதச் சொல்.

எங்களிடம் வந்து பழையபடி கலப்பையும்ஏரையும் எடுத்துக்கொண்டு கிராமப் புனருத்தாரன வேலையிலே ஈடுபடுங்கள் என்று சொன்னாலும் சொல்கிளர்ச்சி செய்தால் எதையும் நியாயப்படி-முறைப்படி கேள்அதற்கு நாங்கள் பதில் சொல்லுகிறோம்.

எங்களுக்குப் பின்...

இன்று இருப்பதிலே நாங்கள்தான் மிதவாதிகள்(ஆடினநசயவந). இது  தெரியுமா உனக்குஎங்களுக்குப் பின் இருப்பது புயல்அந்தப் புயலை நாங்கள் அடக்கி நேர்வழியில் செலுத்துகிறோம்எங்களைப் புறக்கணித்தால் எங்களுக்குப் பின்னால் வருவது பெரும் புயலாகத்தான் இருக்கும்ஆகவேபார்ப்பன அன்பர்கள் இந்தப் பழைய முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும்.

இங்கு பக்திஅங்கு அணுசக்தி!!

இந்த நாளிலே அணுசக்தியும் அதற்கு மேற்பட்ட புதிய சக்திகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனஅணுசக்தியிலீடுபட்ட கழிவுப் பொருள்களை எங்கே போட்டு வைப்பது என்று பார்த்துச் சந்திர மண்டலம் அதற்கு ஏற்றதா என ஆராய்ந்து வருகிறார்கள் மேனாட்டாய்வாளர்கள்அவர்கள் சந்திர மண்டலத்தைத் தங்கள் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள்ஆனால்இங்கேயோ சந்திரன் ஆரணங்குகளுடன் லீலை பல புரிகிறான் என்ற கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றனபுதிய செய்திகள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு பக்தியாக்கப்பட்டு வருகின்றனஇந்த நாளிலே பத்திரிகையிலே விநோதமான செய்திகள் வருகின்றன.

துஷ்டர்களால் சுட்டெரிக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் கர்ப்பக் கிரகத்தில் புரோகிதர் சென்று நாசமடைந்து அலங்கோலமாகக் கிடந்தவற்றை எடுக்கையில், 12 அடி நீளமுள்ள  பெரிய  பாம்பு  ஒன்று உடைந்து போன விக்கிரகத்தின்கீழ் படுத்துக்கொண்டிருந்ததுசுற்றியிருந்தவர்கள் அப் பாம்பைத் தாக்க கற்களை எடுத்தனர்ஆனால்திருவாங்கூர் தேவஸ்தான போர்டின் தலைவர் பி.ஜி.என்.உன்னித்தன்மெல்ல அந்தப் பாம்பினிடம் சென்று அதன் படத்தைத் தட்டிக் கொடுத்து அய்யப்பாதயவு செய்து போ என்று உரத்த குரலில் சொன்னார்அந்தப் பாம்பும் அவர் காட்டிய திசையில் மெல்ல நகர்ந்து சென்றதுஇதுபோன்ற செய்திகள் பிரமாதமான தலைப்புகளுடன் பிரசுரிக்கப்படுகின்றனகட்டம் கட்டியும்-பெரிய எழுத்தில் அச்சுகோத்தும் இந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றனஇந்தச் செய்தி தவறானது என்று அதற்குப்பின் செய்தி வருகிறதுஆனால்இந்த மறுப்பு மட்டும் மூன்று காலத்தில்  (மூன்று பத்தி நீளத்தில்போடப்படுவதில்லைஎங்கோ மூலையில் இடுவார்கள்.

பத்திரிகையிலே இன்னொரு செய்தி வருகிறதுகோடம்பாக்கத்திலே ஒரு சாமியாரைப்பற்றிசாமியார் சமாதியில் இறங்கப் போனாராம்சாமியார்தான் குறிப்பிட்ட தினத்தன்று இந்த இகலோகத்தைத் துறந்து பரலோகம் போய்விடவில்லைசாமியார் சாகப்போவதைக் காண மக்கள் கூடியிருந்தனராம் ஆனால்அவர் குறிப்பிட்ட நள்ளிரவு கடந்து வெகுநேரமாகியும் தேக விநியோகம் ஆகவில்லைசீறியிருக்கின்றனர் மக்கள்தெகிடுதத்தக்காராசோதியில் அய்க்கியமாகப்போவதாகச் சொன்னாயே - ஏன் இன்னும் சமாதி அடையவில்லைஎன்று சாமியாரை நோக்கிப் பாய்ந்திருக்கின்றனர்சாமியாரோஆத்மாவை அய்யன் பால் வைத்து அசையாது மோன நிலையிலிருப்பேன் என்று சொன்னேனே யொழியசெத்துவிடப்போவதாகச் சொல்லவில்லையே என்று ஏதேதோ ஏமாற்றுவித்தைகளைக் கொட்டியிருக்கிறார்வேடதாரிகளின் மோசப் பேச்சில் மயங்கிய மக்களோகொதித்து எழுந்திருக்கின்றனர் அக்கோவணாண்டியை நோக்கிமக்களுக்கும்-சாமியாருக்குமிடையே காவலர் (போலீசார்வந்ததால் நிலைமை கட்டுக்கடங்கியிருக்கிறது.

கோடம்பாக்கத்திலே ஒரு சாமியார் சமாதியிலிறங்கப் போன செய்தியையும்அய்யப்பன் கோயிலிலே பாம்பு வந்துபோன செய்தியையும் மக்கள் பகுத்தறிவு பெற்று வரும் இந்த நாளிலே - மக்களின் அறிவுத் தூதுவனாக இருக்கவேண்டிய பத்திரிகைகள் வெளியிடுவது நல்லதல்ல.

இத்தகைய  சூழ்நிலையை வளமாக்கிப் பாதையைச் செப்பனிடும் பொறுப்பு பத்திரிகையாளர்களுடையதுமதத்தை ஒழித்துமூட பழக்கங்களை முறியடித்துமக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவே நாம் இன்று பாடுபடுகிறோம்.

நம் திட்டம்-அவர்கள் நிறைவேற்றுவார்கள்!

சட்டசபையில் இனி அமரப்போகும் மந்திரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்மவர்களாகவே இருப்பார்கள்நமக்கு வேண்டியது பதவி அல்லபதவியிலிருப்போர் நம்மவர்களாகவே இருக்கிறார்கள்இருப்பார்கள்நாம் நெடுநாளாகக் கூறிவரும் திட்டங்களை நாம் போய்த்தான் நிறைவேற்ற வேண்டும் என்று இல்லைஎதிர்பாராதபடி பிறர் நிறைவேற்றியே வருகிறார்கள்இனியும்  இதுபோல் பல சட்டங்களை நிறைவேற்றுவது  உறுதிதிராவிடப் பெருங்குடி மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ள எழுச்சி வருங்காலத்திலே பெரும்பயன் அளிக்கும்அரசியல்பொருளாதாரம்-இவற்றிலே நாம் இனி நல்ல உயர்வை எதிர்பார்க்க முடியும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்துமந்திரி மாதவமேனனே  (கேரள அமைச்சராய் இருந்தவர்வானொலியில் (அகில இந்திய ரேடியோவிலேபேசக்கூடிய நிலை வந்திருக்கிறதுகதராடையும்காந்திகுல்லாயும் தரித்திருக்கும் காங்கிரஸ்காரர்களிலே பலபேர் இன்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்துப் பேசுகிறார்கள்சட்டசபையிலே இனி எந்தக் கட்சி வந்தாலும் அந்தக் கட்சி நம் கழக வேலைகளைச் செய்யும்.

ஒருவனுக்கு ஒரு மனைவிக்குமேல் கூடாது என்று, 25 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லடிபடப் பேசினோம்இப்பொழுது என்ன ஆயிற்றுசட்டமே வந்துவிட்டதேமுருகர் கடவுளாக இருக்கிற காரணத்தால் அவருக்கு விதிவிலக்கு ஏற்பட்டிருக்கிறதுமுருகக்கடவுள் மனிதராக இருந்தால் இன்று சர்க்காரால் (ஆட்சியாளரால்தண்டிக்கப்பட்டுச் சிறையிலே தள்ளப்பட்டிருப்பார்.

அன்று வீதியோரங்களிலே நின்றுகொண்டு கலப்புமணம் வேண்டுமென்று பேசினோம்இன்று நாட்டிலே பல இடங்களிலே கலப்புமணம் நடைபெறுவதைக் காண்கிறீர்கள்பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று பேசினோம்இன்று டில்லிவரை இதற்காகப் போராடுகிறார்கள்நம்முடைய மன எழுச்சியை யாராலும் தடுக்க முடியாதுமதுரையிலே சைவமதத்தை எதிர்த்தனர் என்ற காரணத்திற்காக, 8000 சமணர்களை மதவெறியர்கள் கழுவேற்றினார்கள்இதனால் சமணர்கள் அழிந்துவிட்டார்களா என்ன?

வென்றதுவெல்வது அறிவுஅடக்கு முறையன்று!

சர்க்கார் நம் மீது வீசும் அடக்குமுறை பெரிதல்லஅடக்குமுறை ஆபத்தானது மட்டுமல்லஅடக்குமுறை ஒரு விசித்திரமான சக்திஅதைக்கண்டு அஞ்சுபவர்கள் நாங்களல்லஅடக்குமுறையைக் கொண்டே கட்சியை நடத்த முடியாதுமக்களை மடமையினின்றும் மீட்போம்மனித சமுதாயத்தைப் பயம் என்ற சுடுகாட்டிலிருந்து வாழ்வு மாளிகைக்கு அழைத்துச் செல்லுவோம்மனித உலகே எனது கடவுள் அதற்குச் சேவை செய்வதே என் மதம் என்று முழக்கமிட்ட சாக்ரடீசுக்கும் மதவெறி நச்சுக் கோப்பையைத் தந்ததுபரிசாகஆனால்அழிந்தது மதவெறிஅதற்காக உயிர்விட்ட சாக்ரட்டீஸின் தத்துவமல்லஉலகத்தைப் பற்றிய உண்மையை உணராதவர் களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோஇன்று உலகம் இவர்களைப்பற்றி என்ன பேசுகிறது?

சார் அரசனின் கொடுங்கோன்மையைக் களைந்து சமதருமக் கொடியைப் பறக்கவிட்ட  லெனினைப்பற்றி இன்று உலகம் என்ன பேசுகிறது?

முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் (ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்இப்பொழுதுள்ள சர்க்காரைப் பற்றி விவசாயிகளிடையிலே என்ன பேச்சுப் பேசுகிறார் என்பது தெரியுமா உங்களுக்குமந்திரி அவிநாசியார் (அவிநாசிலிங்கம் செட்டியார்இந்தி ஏகாதிபத்தியத்தை வன்மையாகக் கண்டித்திருப்பதைப் பார்த்தீர்களாநிலைமை எவ்வளவு மாறியிருக்கிறது பாருங்கள்.

நாம் எவ்வளவோ வெற்றிகளைப் பெற்றுவருகிறோம்திராவிட நாடு இதழின்-ஜாமீன் வழக்கிலேநாம் பெரும் வெற்றி பெற்றோம்மக்கள் மன்றத்திலே இப்பொழுது பல வெற்றிகளைப் பெற்றுவருகிறோம்ஏனெனில் நம் வாதத்தில் நேர்மை உண்டுஆம்அத்துடன் வாதாடுவதிலே நாம் திறமைசாலிகள் என்பதும் உண்மையேஅதையும் மறைப்பானேன்வாதாடுவதிலே திறமையுள்ளவர்கள் என்பது மட்டுமல்லவெற்றிக்குக் காரணம்நம்முடைய வழக்குகள் நியாயமானவைநேர்மையானவைஆதலால்தான் அவ்வளவு சுலபத்திலே நமக்கு வெற்றி கிடைக்கிறது.


தியாகராயர் வகுத்த அடிப்படை!

தியாகராயர் தான்நாம் வெற்றிமேல் வெற்றிபெற வழி காட்டினார்இருட்டறைகளிலும் காட்டு நிலத்திலும் கூட்டம் கூடி இயேசுநாதர் உபதேசத்தைக் கேட்டு உலகம் உயர்ந்தது போலதியாகராயரின் சொற்கள் தென்னாட்டில் மெல்ல மெல்ல ஏழை எளியோர் குடிசையில் குடிபுகுந்துபின்னர் மாளிகைகளில் எல்லாம் சென்றுமக்கள் மன்றத்திலே புதியதோர் எழுச்சியை உண்டாக்கி விட்டது.

சர்.தியாகராயர் புதுமை பல செய்து காட்டினார்அதிலே தலைசிறந்த புதுமைதான் இந்தப் பார்ப்பனரல்லாதார் புரட்சிஅது மிக அபூர்வமான வெற்றியைத் திராவிடருக்குத் தந்தது.

தியாகராயாரைப் பற்றிய தொகுப்பு நூல் ஒன்று நமக்கு மிகமிகத் தேவைதிருவல்லிக்கேணி-

திராவிட முன்னேற்றக் கழகத்தார் இந்த நல்ல பணியிலே ஈடுபடவேண்டும்தியாகராயரின் குடும்பத்தாரிடமும்தியாகராயரின் அன்பர்களிடமும் சென்று அவரைப் பற்றிய முக்கியமான குறிப்புகளைச் சேகரித்துஅடுத்த ஆண்டிலே தியாகராயரைப் பற்றி அழகிய தொகுப்பு நூலை வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்சர்.பி.தியாகராய செட்டியார்டாக்டர்நடேச முதலியார் ஆகிய இருவரின் சரித்திரமே இன்னும் எழுதப்படவில்லைதமிழ் ஆராய்ச்சியிலும் தமிழ்த்தொண்டிலும் ஈடுபட்டிருக்கும் நம்முடைய அறிஞர் (பன்மொழிப் புலவர்கா.அப்பாதுரை அவர்கள் இந்தப் பணியிலே ஈடுபட வேண்டுமென்று அவரையும் அன்புடன் வேண்டிக் கொள்ளுகிறேன்.

கூட்டம் கூடி நாம் பேசுவதோடு நில்லாமல் இதுபோன்ற ஆக்கவேலை களிலும் ஈடுபட வேண்டுமென்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தியாகராயர் வாழ்க்கைக் குறிப்புகளோடு டாக்டர்நடேச முதலியார் அவர்களின் வாழ்க்கையையும் சேகரிக்க முற்படுங்கள்நம்மைவிட்டுப் பிரிந்த இவ்விரு பெரியாரின் சரித்திரங்கள் அவசியம் எழுதப்பட வேண்டும்.

மறைந்த நம் மாவீரர்-வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் நினைவு நாளை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடிய உங்களை மனமுவந்து பாராட்டுகிறேன்.

தியாகராயர் நம்மைவிட்டுப் பிரிந்தார்ஆனால்அவரது ஞாபகம் நம்மைவிட்டுப் பிரியாதுசர்.பி.தியாகராயர் அரும்பாடுபட்டு வளர்த்த கொள்கைகளைக் கடைப்பிடித்து அதனின்றும் வளர்ச்சிபெற்று உயர்ந்தோங்கி வந்திருக்கும் திராவிடர் இயக்கம் வெற்றிமேல் வெற்றி பெறும் என்னும் உறுதியோடு நீங்கள் வீடு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டு என் பேச்சை முடிக்கிறேன்.

(அறிஞர் அண்ணா அவர்கள் 30-6-1950ஆம் ஆண்டு அன்று சென்னை - திருவல்லிக்கேணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சர்.பிதியாகராயரின் நினைவு நாள் கூட்டத்தில் ஆற்றிய உரை)

பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை

சென்னையில் 20-11-1916ஆம் ஆண்டில்மாநாடு ஒன்று நடைபெற்றதுஅம் மாநாட்டிற்கு வெளியூர்களிலிருந்தும்உள்ளூரிலிருந்தும்தகுதியும் செல்வாக்கும் உடைய பிராமணரல்லாத பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்பிராமணரல்லாத பெருமக்கள் முன்னேற்றத்திற்காகசெய்தித்தாள்வெளியிடவேண்டுமென்றும்அவர்கள் உரிமைகளைக் காப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றை அமைக்கவேண்டுமென்றும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதுஅதற்கிணங்க ஆங்கிலம்தமிழ்தெலுங்கு முதலான மொழிகளில் நாளிதழ்கள் வெளியிடுவதற்காக தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டு வியாபார நிறுவனம் தொடங்கப்பெற்றதுதென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சியும் தோற்றுவிக்கப்பட்டது.

தென்னிந்திய மக்கள் சங்கம் கீழ்க்கண்ட  கொள்கை அறிக்கையைப் பிராமணரல்லாத மக்களுக்கு வெளியிட்டதுஅது சங்கச் செயலாளர் இராவ்பகதூர் பிதியாகராயச் செட்டியார் அவர்கள் பெயரால் வெளிவந்தது.

கொள்கை அறிக்கை

இந்திய சுயஆட்சி இயக்கத்தைப் பொறுத்தமட்டில் சென்னை மாகாணத்திலுள்ள முக்கியமான பல பிராமணரல்லாத வகுப்பினரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து அறிவிக்க வேண்டிய நிலை இப்பொழுது தோன்றியுள்ளதுமேலும் தற்காலம் அரசியலில் இவர்களுக்குள்ள நிலை என்ன என்பதனையும் குறிப்பிட வேண்டியது இன்றியமையாததாகிவிட்டது

இம் மாநிலத்தின் மக்கள் தொகை 4.5 கோடி ஆகும்அதில் நான்கு கோடிக்கு குறையாதவர்கள் பிராமணரல்லாதவராவர்வரி செலுத்துவோர்களில் பெரும்பான்மையோரும் அவர்களேயாவர்மேலும் குறுநில மன்னர்கள்பெருநிலக்கிழார்கள்விவசாயிகள் ஆகியோரும் பிராமணரல்லா தவரேசென்னையில் அரசியல் என்ற பெயரால் நடைபெறும் இயக்கங்களில் பங்கு கொள்ள உரிமை இருந்தும் இவர்கள் அதில் பங்கு கொள்ளவில்லைமக்களிடையே இவர்களுக்குள்ள செல்வாக்கை நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறிதும் இவர்கள் பயன்படுத்தவில்லை

எல்லாம் கட்டுப்பாடாக நடைபெறும் இக்காலத்தில் தங்களுடைய உரிமைகளை காப்பாற்றிக் கொள்ளவோஅரசியலைத் தொழிலாகக் கொண்டவர் தங்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வதைத் தடுக்கவோ இவர்கள் ஒன்றும் செய்யவில்லைஇவர்களுடைய சார்பில் உண்மையைக் வெளிப்படுத்துவதற்கு இவர்களிடம் பத்திரிகைகளும் இல்லை

15 லட்சம் பேர்களே உள்ள பிராமணர்களின் நிலையைக் கவனிக்கும்போதுபிராமணர் அல்லாத இவர்களுடைய அரசியல் வாழ்க்கை எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.

அரசாங்க அலுவல்கள்

தற்போதுசென்னை எக்சிகியூடீவ் கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு 
சர்.அலெக்சாண்டர்

கார்டியூ,1913ஆம் ஆண்டில் பொதுப்பணிக் குழுவின் முன்சில சான்றுகளை அளிக்குங்கால்இந்த மாகாணத்தில் பிராமணர்பிராமணரல்லாதாரின் நிலை எவ்வாறுள்ளது என்பதை விளக்கமாகக் கூறியுள்ளார்பிராமணரல்லாதாருக்காகப் பரிந்து பேசவேண்டுமென்று அவர் கூறவில்லைஇருந்த நிலையை விளக்கினார்இண்டியன் சிவில் சர்வீசுக்கெனஇங்கிலாந்திலும்இந்தியாவிலும் ஒரே சமயத்தில் வைக்கப்படும் தேர்வுகளில்பிராமணர்களே முழுதும் வெற்றிபெறுகின்றனர் என்றார்பிராமணர்களைப் பற்றிக் குறிப்பிட வந்த அவர்அவர்களை மிகச்சிறிய தனித்து வாழும் சாதியினர் என்கிறார்

1892ஆம் ஆண்டு முதல் 1904ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டித் தேர்வுகளில்வெற்றி பெற்ற 16 பேர்களில் 15 பேர் பிராமணர்கள் ஆவர்அது 100-க்கு 95 சதவிகிதமாகும்கடந்த 20 ஆண்டுகளில் மைசூர் மாகாணத்தில்மைசூர் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வுகளில் பிராமணர்கள் 85 சதவிகிதம் இடத்தைக் கைப்பற்றினர்சென்னை மாகாணத்தில்உதவிப் பொறியாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டபோதுஅதே 20 ஆண்டு காலத்தில்பிராமணர் 17 பேராகவும்பிராமணரல்லாதார் நான்கு பேராகவும் எடுக்கப்பட்டனர்கணக்குத் தணிக்கைத் துறையில் நடைபெற்ற தேர்வுகளிலும் இதே மாதிரி முடிவே இருந்ததுசென்னை மாகாணத்தில்உதவி கலெக்டர் 140 இடங்களில் பிராமணர்க்கு 77 இடங்கள்பிராமணரல்லாதார்க்கு 30 இடங்கள்ஏனைய இடங்கள் முகம்மதியர்இந்திய கிறித்தவர்அய்ரோப்பியர்ஆங்கிலோ இந்தியர் முதலானவர்களுக்குக் கிடைத்தனமற்றொரு வியப்பு என்ன எனில்போட்டித் தேர்வு வைக்காத ஆண்டுகளிலும் கூட ஆட்களை நியமிப்பதில் பெரும் பகுதிபிராமணர் கையில்தான் இருந்தது என்பதாகும்.

இவ்வாறு சர்.அலெக்சாண்டர் கார்டீயூ குறிப்பிட்டு விட்டுமேலும் குறிப்பிடுகிறார்!

1913ஆம் ஆண்டில் மாவட்ட நீதிமன்ற நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களுக்குப் பிராமணர்கள் 93 இடங்கட்கும்பிராமணரல்லாதார் 25 இடங்கட்கும்இந்திய கிறிஸ்தவர்அய்ரோப்பியர்ஆங்கிலோ இந்தியர் எஞ்சிய இடங்கட்கும் நியமிக்கப்பட்டனர் இந்தப் புள்ளி விவரங்களிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் இந்தியாவில் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வு என்பது பெரும்பாலும் முழுதும் பிராமணர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டு இருந்தது என்றும்பிராமணரல்லாதார்கள் அதிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதும் வெளிப்படையாகின்றது என்று அவர் ஒரு முடிவுக்கு வந்தார்சென்னை அரசிற்கு உட்பட்ட சுதேச சமத்தானங்களில்  என்ன நிலை இருந்து வருகின்றது என்பதை சர்அலெக்சாண்டர் குறிப்பிடவில்லைஅங்கும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகின்றதுஇது தவிர அதிகாரிகள் தங்கள் மனம்போல் நியமிக்கும் கீழ்நிலை உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது தெரியவரும்.

இப்பொழுது அரசாங்க அலுவல்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ள நாம் புள்ளி விவரங்களைப் பார்க்க வேண்டாம்இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த பதவிகள் எந்த அடிப்படையில் கொடுக்கப் படுகின்றன என்பதை நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாதுஆளுநரின் ஆட்சிக் குழுவிற்கு இந்தியர்களும் நியமிக்கப்படலாம் என்று முடிவு செய்தபின் மூன்று பேர்கள் வரிசையாக நியமிக்கப் பெற்றனர்அதில் கடைசி இருவர் பிராமண வழக்கறிஞர்கள்அய்ந்து இந்திய உயர்மன்ற நீதிபதிகளில் நால்வர்-

அதாவது இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட  இடம் - அனைத்திலும் பிராமணர்களே நியமிக்கப்பெற்றனர்

1914ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு ஒரு புதிய செயலாளர் பதவியைத் தோற்றுவித்துஅதில் ஒரு பிராமணரை நியமித்தனர்ரெவினியூ போர்டின் (வருவாய்த் துறை வாரியம்இந்தியச் செயலாளர் ஒரு பிராமணர்அரசாங்க அலுவலர்களிலிருந்து மாவட்டக் கலெக்டர்களாக (ஆட்சித் தலைவர்களாகஇருவர் நியமிக்க வேண்டிய பொழுது பிராமணர்களே நியமிக்கப்பெற்றனர்.

பொது நிறுவனங்கள்

அரசாங்க அலுவல்களில் காணப்பட்ட நிலையே நகரவைமாவட்டக் கழகம்  முதலிய நிறுவனங்களிலும் இருந்து வந்ததுபிராமண வாக்காளர்கள் அதிகமாக இருந்த தொகுதிகளில் பிராமணரல்லாதார் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதுபிராமணரல்லாத வாக்காளர்கள் எல்லாரும் ஒற்றுமையாய் ஒருவரை ஆதரிப்பது கிடையாதுஆனால் பிராமணர்கள்யார் போட்டியிட்டாலும்பிராமணர்களையே ஆதரிப்பர்.

சென்னைப் பல்கலைக்கழக இந்திய உறுப்பினர்களில் பெரும்பான்மை யோர் பிராமணர்களாயிருந்தபடியால் பல்கலைக்கழகத்திலிருந்துசட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில்பிராமணரல்லாதார் எப்போதும் வெற்றி பெறுவது இல்லைஇதனால் எத்துணைத் தகுதியுடையோராயிருப்பினும் பிராமணரல்லாதார் இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பவில்லைபோட்டியிட நேர்ந்தால்ஆங்கிலேய உறுப்பினர்களின் ஆதரவுகொண்டே வெற்றி பெறமுடியும்.

 1914ஆம் ஆண்டுக்குரிய சென்னைச் சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ்சென்ற குஞ்ஞராமன் நாயர் கேட்ட கேள்விக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில்பிராமணர்கள் 452 பேர்பிராமணரல்லாத இந்துக்கள் 12 பேர்பிற இனத்தினர் 74 பேர் என்று பதில் கூறப்பட்டது.

1907ஆம் ஆண்டிலிருந்து பதிவுபெற்ற பட்டதாரிகள் சார்பில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்அவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும்  பிராமணர்களே. 1907ஆம் ஆண்டிலும் சரிஅல்லது சட்டசபையில் பதில் கூறிய 1914ஆம் ஆண்டிலும் சரி

எப்பொழுதும்சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிராமணர்களே பெரும்பான்மையாக இருந்தமையால் எத்துணைத் தகுதி பெற்றவராயிருப்பினும்பிராமணரல்லாதார்தேர்தல்களில் வெற்றி பெற்றதே கிடையாதுஇந்தத் தேர்தல்களை நடத்துவதில் ஒரு தனிச்சாதியினர் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றிருந்ததன் பயனாய் டில்லி சட்ட சபையிலாயினும் சரிசென்னை சட்ட மன்றத்திலாயினும் சரிநகர சபைகளிலாயினும் சரிபிராமணரல்லாதார் நிலை அவ்வாறே இருந்து வந்ததுஏதேனுமொரு சமயம் நேர்மையான ஓர் ஆட்சியாளர்பொது நிறுவனங்களில் பிராமணர்களின் ஆதிக்கம் மிகுதியாயிருப்பதைக் கருதிப் பிராமணரல்லாதாரின் (பிரதிநிதியாகசார்பாளராக யாரேனும் நியமிக்கப்பட்டால்பிராமணப் பத்திரிகைகள் அவரைக் கடுமையாகக் கண்டிக்கும்.

இதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால்சட்டசபை மேலவைக்குமேன்மை தங்கிய பென்ட்லாண்ட் பிரபுசிலரை நியமித்த பொழுதுபத்திரிகைகள் எவ்வாறு அவரைக் கண்டித்தன என்பதே போதும்அரசினர்க்கு உட்பட்ட பொது நிறுவனங்களைத் தவிரபிற அரசியல் கட்சிகள் போன்றவைகளிலும்சென்னையில் ஆயினும்மாவட்டங்களில் ஆயினும்தேர்தல் தொடர்பான சில புள்ளி விவரங்களைப் பார்த்தால் இதே நிலைதான் அங்கும் இருப்பது தெரியும்அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம்அனைத்திந்திய காங்கிரசுக் குழுவுக்குச் சென்னை மாநில உறுப்பினர்களாக 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் அனைவரும் பிராமணர்களேஅந்தக் குழுசெய்யும் முடிவு உலகம் முழுவதும் பறையறைவிக்கப்படும் போதுஇம் மாநிலத்திலுள்ள நான்கு கோடி பிராமணரல்லாதவர்களின் கருத்தும் அதுவேயாகுமென்று பொருள்படும்பின்தங்கியவர்கட்கு ஏதேனும் சலுகைகள் கொடுக்கப்படும்போது அதைக்கண்டு ஆதிக்கத்திலிருக்கும் சாதியினர் கட்டுப்பாடாக எதிர்ப்பதை நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டு வருகிறோம்.

பிராமணரல்லாதாரும் கல்வியும்

இவ்வாறு காணப்படும் பிராமண ஆதிக்கத்திற்குக் காரணம் கூறுபவர்கள்பிராமணரல்லாதார்களைவிடக் கல்லூரிப் படிப்புப் பெற்ற பிராமணர்கள் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்க அலுவலகங்களிலும்பிற நிறுவனங்களிலும் அவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பர்இதை யாரும் மறுக்கவில்லைபழங்காலம் தொட்டு அவர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம்இந்துக்களிலே உயர்ந்தபுனிதமான சாதி என்று கருதும் தன்மைநிலையான நம்பிக்கைஇவற்றை நூல்கள் வாயிலாகவும் வாய்மொழியாகவும் சொல்லிச் சொல்லித் தாங்களே ஏனையோரைவிட உயர்ந்தவர்கள்தாங்களே கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டனர்இவையெல்லாம் ஏனைய இனத்தாரைவிட அவர்கட்குஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் செல்வாக்கைத் தேடித் தந்தன!

ஆங்கிலக் கல்வி அறிவைத் தவிர மற்றபடிபாரம்பரியம்நாட்டின் உரிமைசமுதாயத்தில் உள்ள செல்வாக்குஅமைதியான வாழ்க்கைத் தொழில்மாநில முன்னேற்றம்எண்ணிக்கை-

இவையெல்லாம்  பயனற்றவை  என்று கருதலாமாஆதிமுதல்  இவற்றிற்காக வாழ்ந்துவரும் மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது ஊக்கம் கொடுக்க வேண்டாமாகல்வியைப் பொறுத்தமட்டிலும் கூடப் பிராமணர்கள் தாம் படித்தவர்கள் என்றும் கூறமுடியாதுவெகு காலத்திற்குப் பின்பு படிக்கத் தொடங்கினாலும் பிராமணரல்லாதாரும் அத்துறையில் முன்னேறி வருகின்றனர்ஒவ்வோர் இனத்தினரும் ஒவ்வொரு நிலையில் இருக்கின்றனர்.  செட்டியார்கோமுட்டிநாயுடுநாயர்முதலியார் முதலிய வகுப்பினர் மிக விரைவாக முன்னேறி வருகின்றனர்மிகப் பின்தங்கியவர்கள்கூட மிக அக்கறையுடன் முன்னேறுவதற்காக உழைத்து வருகின்றனர்படிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோர்க்கும் ஏற்பட்டுவிட்டது.

பிராமணர்களில் காணப்படுவதைவிடப் பிராமணரல்லாதாரிடையே காணப்படும் கல்வி முன்னேற்றம் சமநிலையில் இருந்து வருகிறது என்று கூறலாம்ஏது காரணம் பற்றியோ கல்வி இலாகாவினர்பிராமணப் பெண்களுக்கும்விதவைகளுக்கும் கல்விச் சலுகைகள் காட்டி வருகின்றனர்இருந்தாலும் பிராமணரல்லாதாரைச்சேர்ந்த நாயர் பெண்களின் அளவுக்குப் பிராமணப் பெண்கள் கல்வி கற்றதாக இல்லைபல வழிகளிலும்பல துறைகளிலும் பிராமணரல்லாதார்மாநில முன்னேற்றத்திற்காகஅடக்கமாகவும் பயனுள்ள முறையிலும் தொண்டு செய்து வருகின்றனர்அரசியலிலும்,  அரசாங்கத்திலும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாயிருப்பதால்பிராமணரல்லாதார் செய்யும் தொண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காது மறைக்க ஏதுவாயிருக்கிறது.

ஓர் இயக்கம் வேண்டும்

அறிவுத்துறையில் போட்டி அதிகமாக இருக்கும் இக்காலத்தில்தேர்வுகளில் தேறுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லைஎங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில்ஆங்கிலம் படித்த சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் அரசாங்க அலுவல்களில்  உயர்ந்தது  தாழ்ந்தது  ஆகிய எல்லாவற்றையும்  ஏகபோகமாக உரிமையாக்கிக் கொண்டுபெரும்பான்மை வகுப்பினர்களில் படித்த ஒரு சிலருக்குக் கூட இடங்கொடுக்காமல் இருந்துவருவதேயாகும்அவர்கள் எல்லாத் தகுதியும்பண்பாடும் பெற்றிருந்தும்அவர்கட்கு வாய்ப்புகொடுக்கப்படவில்லை.
எத்தனையோ இடையூறுகள் இருந்தும்நீதித்துறையில் வழக்கறிஞர் தொழில்,  மருத்துவம்பொறியியல் முதலான துறைகளில் பெரிய சமீன்களை ஆட்சி நடத்துவதில் பிராமணரல்லாதார்கள் பலர் மிகச்சிறப்புடன் விளங்கி வருகின்றனர்அவர்களில் சிலருக்கு இணையாக பிராமண வகுப்பில் ஒருவரையும் கூறமுடியாத அளவு அவர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர்தன் உரிமையை உணர்ந்து சுயமரியாதையுடன் அவர்கள் ஒன்றுசேர்ந்து முயற்சி செய்திருப்பார்களேயாயின்இன்று அரசாங்க அலுவல்களில்அவர்களின் பிறப்புரிமையாகிய முதலிடத்தைப் பெற்றிருப்பார்கள்தங்களுக்கென்று ஒரு சங்கம் இல்லாததாலும் தங்களுடைய கருத்துகளை வெளியிடப் பத்திரிகை இல்லாததாலும் எல்லோரும் தங்கள் தங்கள் உரிமையைத் தெரிந்துகொள்ள முடியாமற் போயிற்று!

படிப்படியான அரசியல் உரிமைகள் பெறவேண்டுமே தவிரஅதிகார உரிமையற்ற அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டியதில்லைதீவிர அரசியல்வாதிகள்இப்பொழுது பெற்றுள்ள அரசியல் உரிமைகளால் திருப்தியடையவில்லைசூழ்நிலையைக் கவனிக்காது மேலும் மேலும் ஏதேனும் உரிமைகளைக் கோருவதில் அவர்களுக்கு ஒரு திருப்திஅம்முறையில் இப்பொழுது பிராமணராகிய அவர்கள் சுய ஆட்சி  கேட்கின்றனர்முன் அனுபவங்களைக் கொண்டு பார்த்தால்நம்முடைய கருத்தைச் சரியான நேரத்தில் தெரிவிக்கவில்லையென்றால்அகில இந்தியாவும் அவர்கள் கோரிக்கையை ஆதரிப்பதாகக் கருதப்படும்அளவுக்கு மிஞ்சிய இத்திட்டத்தைப் பற்றியோஅல்லது இம்பீரியல் சட்டமன்ற உறுப்பினர்கள் 19பேர் வைசிராயிடம் கொடுத்த திட்டத்தைப் பற்றியோ இங்கு நாம் விரிவாகக் கூறவேண்டியதில்லைஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் விரும்பவில்லைஇன்று நாடு இருக்கும் நிலையில் வெவ்வேறு சாதியினர் வகுப்பினர்களுக்கு நீதி கிடைக்கவும்அவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவும்தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவும் கூடியவர்கள் ஆங்கிலேயர்கள்தான்.

தவறினால் நாட்டில் தேசபக்தி இன்றி ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சீரழிய நேரிடும்யாதொரு தகுதியுமற்ற அரசியல் அமைப்பைத் தயார் செய்வதைச் சில பிராமண அரசியல்வாதிகள் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர்அத்தகைய அரசியல் அமைப்பை நாங்கள் விரும்பவில்லைமக்களிடத்தில் படிப்படியாக ஆட்சியை எப்படி ஒப்படைக்க வேண்டுமென்பதை முடிவு செய்துமுன் யோசனையுடன்தாராளமாக உரிமைகளைக் கொடுத்து ஆட்சி நடத்த மக்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கவேண்டும்..க்யூம்பானர்ஜிபட்ருடின்தயாப்ஜிஎஸ்.இராமசாமி முதலியார்ரெங்கையா நாயுடுராவ் பகதூர் சபாபதி முதலியார்,  சர்சங்கரன் முதலிய பேரறிஞர்கள் இந்திய தேசிய காங்கிரசின் தொடக்க நிலையில் அதற்கு வழிகாட்டும் தலைவர்களாக இருந்து வந்தனர்.

அப்பொழுது நம் மாகாணத்திலுள்ள பெருமக்கள் பலர் அதனை ஆதரித்து வந்தனர்அக்காலத்தில் அதன் அமைப்பும் பெயரும் ஏதோ ஒரு வகையில் இருந்தாலும்அதன் போக்கு ஓர் உண்மையான தேசிய இயக்கமாக இருந்ததுபழைய கொள்கையில் சிலவற்றை இன்னும் அது பின்பற்றுகின்றதுஆனால்அன்று அது என்ன நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டதுஎன்ன முறையில் நடைபெற்றதுஇன்று அது யாரால்எப்படி நடத்தப்படுகின்றது என்பதைப் பார்த்தால் இம் மாநிலத்தில் சுயமரியாதையுள்ள எந்த பிராமணரல்லாதாரும் அதை ஆதரிக்க மாட்டார்சமூகப் பிற்போக்கு வாதிகளும்நிலைமையை உணராத பொறுமையற்ற அரசியல்வாதிகளும் இன்று காங்கிரசைக் கைப்பற்றியுள்ளனர்ஜனநாயக அடிப்படையில் அதன் அமைப்பு இருந்தாலும் பொறுப்பற்ற சிலர் ஆதிக்கத்தில் அது இருந்துவருகின்றதுநாட்டையும் மக்களையும் அறிந்து தங்கள் கடமையினை உணர்ந்தபொறுமையும் அனுபவமும் வாய்ந்த அரசியல்வாதிகள் விரைவில் காங்கிரசில் ஆதிக்கம் பெற்றுநாட்டு நிலைக்கு ஏற்ற வழியைக் காட்ட வேண்டுமென்று நாங்கள் உண்மையாக விரும்புகிறோம்.
வகுப்புவாத ஆட்சியல்ல!

ஆட்சியில் இன்றுள்ள சூழ்நிலைக்குத் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லைவகுப்பு அல்லது வர்க்க ஆட்சியையும் நாங்கள் முழுவதும் குறை கூறவில்லைஇந்தியாவின் உண்மையான நன்மையைக் கருதிஆங்கில ஆட்சி முறையைப்போன்று நீதியும் சம உரிமையும் விளங்கும் ஆட்சியே வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்நாங்கள் ஆங்கில ஆட்சியில் பற்றுடையவர்கள்அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்அவ்வாட்சியில் பல குறைபாடுகளும் குற்றங்களும் காணப்படினும் அது நேர்மையாகவும் அனுதாபத்துடனும் நடைபெறுகின்றது.

எனினும் நாட்டைப்பற்றி மேலும் சரியாகத் தெரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் மக்கள் விருப்பத்திற்கு இணங்க ஆட்சி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்ஆனால்மக்கள் விருப்பம் என்ன என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்முதலில் ஒவ்வொரு வகுப்புஇனம் என்ன கருத்துடன் இருக்கின்றதுஅவற்றின் தேவையென்ன என்பனவற்றை நன்கு அறிந்துகொண்டே ஆட்சியில் சீர்திருத்தம் செய்யவேண்டும்அவற்றை அறிந்து கொள்வதற்கு வழக்கமாகப் பின் பற்றும் முறைகளையே கையாளக்கூடாதுசமுதாயத்தில் உயர்ந்த சாதிதாழ்ந்த சாதி என்ற வேற்றுமைகள் மறையத் தொடங்கினால் மட்டுமே சுயஆட்சி பெறுவதற்கான தகுதியை நாம் பெற்று வருகின்றோம் என்று கூறலாம்ஆகவேஅரசியல்வாதிகள் தங்கள் முன்னால் உள்ள பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண்பதில் முனைந்து நிற்கவேண்டும்.

அதிகாரத்தை எல்லோருக்கும்
பகிர்ந்து அளிக்கும் சுய ஆட்சி!

போரில் வெற்றி கண்டவுடன் ஆங்கில அரசியல்வாதிகளும்நாடாளுமன்றமும் இந்திய அரசமைப்பைப் பற்றிக் கவனிப்பார்கள்அரசியல் உரிமைகள் வேண்டும் என்று  கோருவதற்கு இந்தியா உரிமை பெற்றுவிட்டதுஅரசமைப்பு எப்படி இருக்கவேண்டுமென்றால்உண்மையான உரிமைகள் விரிவாக இருக்கவேண்டும்ஒவ்வோர் இனத்தினருக்கும்வகுப்பினருக்கும் அவரவர்களுக்கு நாட்டில் உள்ள செல்வாக்கையும்தகுதியையும்எண்ணிக்கையையும் மனத்திற்கொண்டு அவரவர்களுக்கு உரிய பொறுப்பைக் கொடுக்கவேண்டும் . உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை முழு அதிகாரமும்நிதியைப் பயன்படுத்தும் உரிமையையும் கொடுக்க வேண்டும்சுயமரியாதைக்கு இழிவு இல்லாதுஆங்கில சாம்ராச்சியத்திற்கு உட்பட்ட பிற சுதந்திர நாடுகளுக்கு ஒப்பான தகுதியைக் கொடுக்க வேண்டும்.

பிராமணரல்லாதாரின் முதற்கடமை

விழிப்படைந்த பிராமணரல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்அவர்களுடைய பிற்காலம் அவர்கள் கையில்தான் இருக்கின்றதுஅவர்கள் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரிதுஅத்துடன் மிக அவசரமானதுமாகும்முதல் வேலையாகச் சிறுவர் சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் நாம் படிக்கவைக்க வேண்டும்பல இடங்களில் சங்கங்களைத் தோற்றுவித்து பிராமணரல்லாதார்க்கு எந்தெந்தச் சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறிஅதிகமானவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும்நிதி திரட்டி ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும்கல்வித்துறையில் நாம் முன்னரே கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்.

அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபடவேண்டும்கல்வியில் கவனம் செலுத்துவதுடன் சமுதாய முன்னேற்றம்அரசியல் முன்னேற்றம் முதலியவற்றிற்கும் நாம் தீவிரமாக உழைக்கவேண்டும்அதற்கான பல பத்திரிகைகளைத் தொடங்கி சங்கங்களும் ஆங்காங்கு அமைக்கவேண்டும்உரிமைகளுக்காகப் போராடவேண்டும்இவற்றைச் செய்யாது நாம் இதுவரை வாளாவிருந்தோம்அதைச் சில சுயநலவாதிகள் தங்கள் நலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

அதன் பயனாகபிராமணரல்லாதார்களிடையே மிக அதிருப்தி காணப்படுகிறதுதங்களை ஒத்த பிராமணர்கள் மட்டும் எல்லாத் துறைகளிலும் முன்னேறி செல்வாக்குடன் இருப்பதை அரசினர் சரியாக உணரவில்லை என்று கருதுகின்றார்கள்நாள்தோறும் அதிருப்தி வளர்ந்து வருகின்றதுஅரசாங்கத்தின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வரவேண்டும்அத்துடன் முதலில் பிராமணரல்லாதார் தங்களுக்குத் தாங்களே உதவிசெய்து கொள்ளவேண்டும்கல்விசமுதாயம்அரசியல்பொருளாதாரம் முதலிய பல துறைகளிலும் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்பின்புதான் ஆங்கிலக் குடிமகன் என்ற முறையில் அவர்கள் செல்வாக்குப் பெற முடியும்தேசிய வளர்ச்சி என்று கூறப்படுவதெல்லாம் ஒவ்வொரு மனிதனும்இனமும் வகுப்பும் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைப் பொறுத்ததேயாகும்.

எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால்இன்னும் சிறிது காலத்திற்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச்சியை முதன்மையாகக் கருதவேண்டும்பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும்பொழுதுதான் தாழ்ந்தவன் என்று கருதாதுசுயமரியாதையுடன் சமஉரிமை பெற்றவன் என்று எண்ணவேண்டும்சுயமரியாதையுடன் சமநிலையிலிருந்து மற்றவர்களுடன் பணியாற்றுவதையே ஒவ்வொருவரும் குறிக்கோளாகக்  கொள்ளவேண்டும்.

நூல் அண்ணா கண்ட தியாகராயர்!

ஆசிரியர் - அறிஞர் அண்ணா

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!