இந்து கடவுள்கள் திராவிட இயக்கத்தை ஒழிக்குமா?


மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாள் என்ற  இந்த  ஓர் அடையாள நிகழ்வில் மிகச் சிறப்பான வகையில் இங்கே நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

நம்முடைய பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரிய சிறந்த சிந்தனையாளர்கள் இந்த அரங்கத்தில் அற்புதமான கருத்துகளை ஏராளமாக, தாராளமாக நமக்கு வழங்கியிருக்கிறார்கள்

இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் தோழர் அன்புராஜ் அவர்களே,
எப்போதோ நமக்குக் கிடைக்கக்கூடிய தமிழினத்தின் தனிப்பெரும் சொத்துக்கள்
இந்நிகழ்வில் அறிமுக உரை வழங்கிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களேஇந்த நிகழ்ச்சியில் சிறப்பான வகையில் நம்முடைய அன்பான அழைப்பினை ஏற்று, தன்னுடைய உடல்நலத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல், நாங்கள்  அவரை அழைக்கும் போதே சற்று தயக்கத்தோடுதான் அழைத்தோம். காரணம், அவருடைய வயது மூப்பு என்பது மட்டுமல்ல, அவருடைய உடல்நலம் பேணிக் காக்கப்படவேண்டும் - ஏனென்றால், இத்தகைய அறிஞர்கள் எப்போதோ நமக்குக் கிடைக்கக்கூடிய  தமிழினத்தின்  தனிப்பெரும்  சொத்துகள் என்கிற காரணத்தினாலே, அய்யா சிலம்பொலி செல்லப்பனார் அவர்களை அழைத்து - உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு 4 ஆவது தொகுதியை வெளியிட்டு அவர்கள் ஆய்வுரையாற்றினார்கள்.

நாங்கள் அவரிடம் சொன்னோம், நீங்கள் அதிக நேரம் பேசவேண்டாம் - ஓர்  அடையாளத்திற்குத்தான் உங்களை நாங்கள் அழைத்திருக்கின்றோம். நீங்கள் நூலினை வெளியிடவேண்டும் என்பதுதான் முக்கியம் என்றோம். அவரும், நான் ஓர் அய்ந்து மணித்துளிகள்தான் பேசுவேன் என்று சொன்னார்.

அறிவார்ந்த மக்களுடைய ஒரு திரட்டு ஆனால், அவர்கள் அரை மணிநேரத்திற்கும் மேல் உரையாற்றினார்கள் - இன்னும்விட்டால் பேசிக்கொண்டே இருந்திருப்பார். இந்த அரங்கத்தைப் பார்க்கும்பொழுது, யாருமே உரையை முடிப்பதற்கு முன்வரமாட்டார்கள். அப்படிப்பட்ட அறிவார்ந்த மக்களுடைய ஒரு திரட்டு இந்த அரங்கம்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சிறப்பான ஓர் உரையாற்றினார் அய்யா. இப்பொழுதுகூட அவரிடம் நான் சொன்னேன், அய்யா, நீங்கள் விடைபெற்றுச் செல்லலாம்; தவறாக நான் நினைக்கப் போவதில்லை என்றேன்.

என்னுடைய பேச்சை நிறைய பேர் கேட்பதற்குத் தயராக இருக்கிறார்கள்; சில பேர் கேட்பதில்லை
நான் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டால் கடைசிவரையில் இருப்பது வழக்கம் என்றார்.
இல்லை, அய்யா நீங்கள் போகலாம் என்றேன்.

இல்லை, இல்லை உங்களுடைய உரையை கேட்க வேண்டும் அவசியம் என்றார்.

என்னுடைய பேச்சை நிறைய பேர் கேட்பதற்குத் தயராக இருக்கிறார்கள்; சில பேர் கேட்பதில்லை, அவ்வளவுதான் என்று வேடிக்கையாக சொல்லிவிட்டு, என்னுடைய உரை பிறகு விடுதலை நாளிதழில் வரும், உங்களுக்கு அனுப்புகி றேன் என்று சொல்லிவிட்டு, கட்டாயம் நீங்கள் போகவேண்டும் என்று சொல்லி, அவரை வற்புறுத்தி அனுப்பினோம். ஏனென்றால், அவர் உரிய நேரத்திற்கு உணவு உட்கொள்ளவேண்டும் என்பதால்.

பிரிந்தே இருக்கக்கூடாதவர்கள் - பிரிக்கப்பட முடியாதவர்கள்

அதற்கடுத்து, இந்த ஆண்டு சிறப்பு என்னவென்றால், இடையில் இந்த மேடையில்  நம்முடைய  சகோதரர்  எழுச்சி தமிழர்  எப்போதும்  எங்களால் - நாங்கள் பிரிந்தே இருக்க முடியாதவர்கள் - பிரிந்தே இருக்கக்கூடாதவர்கள் - பிரிக்கப் பட முடியாதவர்கள். ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஓர் இணைப்பு - அது இயல்பானது.

தண்ணீரும், பாலும் இரண்டும் இணைந்தே இருக்கும். ஆனால், எண்ணெய்யும், பாலும் ஒருபோதும் இணையாது. அதனால்தான் சில நேரங்களில் சிக்கல் வருகிறது. வேறொன்றும் கிடையாது. எனவே, அவர்கள் இன்றைக்கு ஆற்றிய உரை எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. நான் எதைக் குறித்து வைத்துக் கொண்டு வந்தேனோ - திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இன்றைக்குப் பல பேர் சொல்லி - நடுவில் கொஞ்ச பேருக்கு ஓர் ஆசை வந்திருக்கிறது இப்பொழுது.

இன்னொரு புறம் முகவரி இல்லாத ஆட்கள் எல்லாம் பெரிய பெரிய ஆட்கள் போன்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் போன்றவை அவர்களை மிகப்பெரிய அறிவாளிகள் போன்று காட்டுகின்றன. அவர்களுக்கும் தங்களுடைய உயரம் என்னவென்று தெரிவதில்லை.

மத்திய அரசாங்கம் இருக்கிறது - அதனுடைய தோள்மேல் அவர்கள் நிற்கிறோம்  என்றவுடன்தங்களுடைய உயரம் அவ்வளவு பெரியது என்று நினைக்கிறார்கள். அதில் இவர்களுடைய உயரம் எவ்வளவு என்பது தானாக தெரியும் போதுதான் அவர்களுக்குப் புரியும்
.
எழுச்சித் தமிழரின் அற்புதமான உரை

அந்த அடிப்படையில் வரும்பொழுது, இந்த சூழ்நிலையில், அற்புதமான ஒரு உரையை நம்முடைய எழுச்சித் தமிழர் அன்பிற்குரிய சகோதரர், நம்முடைய சகோதரர் இன்னுங் கேட்டால் என்னுடைய சகோதரர்-அவ்வளவு அற்புதமான ஓர் உரையை இங்கு நிகழ்த்தியிருக்கிறார்.

திராவிடத்தால் வீழ்ந்தோமா? எழுந்தோமா? என்று.

அவர் சொல்லியதற்கு இணையாக இன்னொன்றை சிந்தித்துக் கொண்டே வரவேண்டும். சரி, திராவிடத்தால் எழுந்தோம் என்று மிகத் தெளிவாக சொன்னார். ஆனால், எழுந்தோம் என்று சொன்னாலே, ஏற்கெனவே வீழ்ந்தோம் என்ற நிலையிலிருந்து எழுந்தோம் என்கிற நிலை வரும்.

வீழ்ந்தது யார்? வீழ்த்தியது யார்? அதுதான்  இப்பொழுதைய  கேள்வி. யார்  நம்மை  வீழ்த்தினார்களோ,   அவர்கள்  மீண்டும் நம்மை வீழ்த்துவதற்கு இப்பொழுது ஆயத்தமாக வருகின்ற இந்த காலகட்டத்தில் முன்பு எப்போதும் தேவைப்பட்டதைவிட பெரியார் தேவைப்படுகிறார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் தேவைப்படுகிறார். அதுதான் மிக முக்கியமானது.

பெரியாரும் - அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்!

பெரியார் என்று சொன்னால், ஒவ்வொரு முறையும் அம்பேத்கரை சொல்லவேண்டிய அவசியமில்லை. அம்பேத்கர் என்று சொன்னால், ஒவ்வொரு முறையும் பெரியாரை சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
மோடியினுடைய ராஜ்ஜியத்திலே கூட ரூபாய் மதிப்பு குறையும்; ரூபாய் மதிப்பு செல்லாது என்று ஆகும். ஆனால், இந்த இரு தலைவர்களுடைய கருத்து செல்லாது என்று சொல்வதற்கு எந்தக் கொம்பனும் இன்னும் பிறக்கவில்லை. செல்லாது என்றும் சொல்ல முடியாது - இந்தக் கருத்துகள் வெல்லாது என்றும் சொல்ல முடியாது. அதுதான் மிக முக்கியம். அப்பேர்ப்பட்ட கருத்துகள் அவருடைய கருத்துகள். எனவே, அந்த சிறப்பான நிலையை சொன்னார்.

கலைஞருக்கு மட்டுமல்ல, என் சகோதரருக்கும் சேர்த்தே சொல்லப்பட்டது

அரசியலுக்கு அவர்கள் போவதைப்பற்றிகூட சொன்னார் கள். இந்த மேடைதான், மனதிறந்து பேசக்கூடிய மேடை யாகும். அதுமட்டுமல்ல, கலைஞர் அவர்கள்கூட அடிக்கடி சொல்வார்கள், கீரி - பாம்பு உதாரணம் சொல்கின்ற நேரத்தில், பாம்பு கடித்து மிகப்பெரிய அளவிற்கு கீரிக்குக் காயம் ஏற்பட்டால், அந்தக் கீரி ஒரு பச்சிலைமீது விழுந்து புரளும் - அந்தப் பச்சிலை அந்தக்  காயங்களையெல்லாம் ஆற்றும். அந்தப் பச்சிலைதான் பெரியார் திடல் என்று கலைஞர் அவர்கள் சொல்வார். இது கலைஞருக்கு மட்டுமல்ல, என் சகோதரருக்கும் சேர்த்தே சொல்லப்பட்டதாக நான் கருதுகி றேன்.

அரசியலில் அவர்கள் சென்ற காரணத்தினால், இது சர்வ சாதாரணம் - அதைத் தவிர்க்க முடியாது. அதற்காக அவரை நான் அரசியலை விட்டுவிட்டு, எங்களோடு வந்துவிடுங்கள் என்று அழைப்பேனா என்றால், நிச்சயமாக அழைக்கமாட் டேன். ஏனென்றால், அந்த இடத்தில், சந்தனம் இருக்க வேண்டிய இடத்தில் சில சாணிகள் வந்து உட்கார்ந்து விடக்கூடாது என்கிற கவலைதான்.

எத்தனையோ செய்திகளை சொல்லவேண்டும் என்று நினைத்தாலும், ஒரு சம்பவத்தை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சில அவசரக் கருத்துகளை சொல்ல வேண்டும்; இன்றைக்கு இந்த மேடையில் சொல்லா விட்டால், பல கருத்துகள் போய் சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேராது.

ஆகவேதான், நாங்கள் அதனைப் பேசவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ இரண்டு அரசியல் கட்சி - அதில் வெற்றி - தோல்வி என்று மாறி மாறி வருகிறதுஅப்போதுகூட மற்றவர்கள் வரவில்லை. இவர்க ளுக்கு இடமில்லை

இன்னும் ஒரு கட்சிக்காரன், தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்று மதவாதத்தை மூலாதாரமாக வைத்துக்கொண்டு முயற்சி செய்கிறார்கள். இங்கே உரையாற்றிய உலகநாயகி அம்மையார் அவர்கள் மிக அழகாக சொன்னார்கள்.

பெரியாரைப் பற்றிய பாடத் திட்டத்திற்கு எதிர்ப்பு யார் சொன்னார்கள் என்றால்தமிழாசிரியர்கள்  சொன்னார்கள் என்று சொன்னார்கள். அதுதான் தமிழினம். பெரியாருடைய சிறப்பு என்னவென்றால், நன்றி பாராட்டாத தொண்டை செய்! தேங்க்லெஸ்ஜாப்  (Thankless job)   நீ நன்றி எதிர்பார்க்காதே! இந்த சமுதாயத்திடமிருந்து நன்றியை, பாராட்டை எதிர்பார்த்தால், இந்த சமுதாயத்திற்கு நீ பணியாற்ற முடியாது. அவர்கள் கோளாறாகத்தான்  இருப்பார்கள். என்றாலும்நீ இந்த  சமுதாயத்தினுடைய தொண்டிலிருந்து சலிப்படையாதே! பின்வாங்காதே! காரணம் வேறொன்றுமில்லை - 5000 ஆண்டு காலமாக அவர்களுடைய மனது பக்குவப்படுத் தப்படாமல் மேலும் மேலும் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகியிருக்கின்ற காரணத்தால், குறைந்த விலைக்கு நம் இனத்தவன் தன்னை விற்றுக் கொள்கிறான் என்று குறிப்பிட்டார் பெரியார். பெரியாருக்கு அதுதான் கவலை. நல்ல விலைக்கு விற்றுக் கொண்டான் என்றால்கூட பரவாயில்லை. மிகவும் குறைந்த விலைக்கு விற்றுக் கொள்கிறானே என்பதால்தான் அவருக்குக் கவலை.
அடுத்தது பெண்ணினம் - பாலியல் நீதி - சமூகநீதி - இந்த இரண்டுதான் சுயமரியாதை இயக்கம். அந்த சுயமரியாதை இயக்கத்தினுடைய வாய்ப்பை பேராசிரியர் உலகநாயகி அம்மையார் அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

பெரியாரால்  உயர்ந்தவர்கள் பல பேர் உண்டு; கல்வித் துறையில்கூட!

யாருக்குப் போய் சேரவேண்டுமோ அதனை செய்திருக்கிறார்கள். அவர்களை மிகவும் பாராட்டவேண்டும். இது போன்ற ஒரு கிறித்துவ கல்லூரியில், இவ்வளவு துணிச்சலாக - பெரியாரால்  உயர்ந்தவர்கள் பல பேர் உண்டு கல்வித் துறை யில்கூட. அவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு துணிச்சலோடு நீங்கள் ஆக்கபூர்வமான பல  பணிகளைச்  செய்திருக்கிறீர்கள்தலைதாழ்த்தி உங்களை வாழ்த்துகின்றோம். நிறைய உலக நாயகிகள் வரவேண்டும் பல்கலைக் கழக வட்டாரங்களில், அதுதான் மிக முக்கியமானது.

அவருடைய கல்லூரி ஒரு சிறப்பான தாராள மனதுள்ள ஒரு கல்லூரியாகும். எப்படி என்பதற்கு எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அந்தக் கல்லூரியில் உலகநாயகி அம்மையார் பணியாற்றுவதற்கு முன்பு, பேராசிரியர் ஹில்டா ராஜா என்கிற அம்மையார் அங்கே இருந்தார்கள். நம்முடைய மேடையில் பல முறை பேசியிருக்கிறார். அவர்கள் ஒருமுறை என்னை அழைத்து வகுப்பெடுக்கச் சொன்னார்கள்.

ஸ்டெல்லாமேரி கல்லூரியில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த என்னை அழைத்து உரையாற்றச் சொன்னார்கள்.

கடவுள் மறுப்பாளன், மத மறுப்பாளன், ஜாதி மறுப்பாளனாகிய என்னை எப்படி உரையாற்ற உங்களுடைய முதல்வர் மற்றவர்கள் அனுமதித்தார்கள் என்று நான் கேட்டேன்.

அதற்குக் காரணம் இருக்கிறது என்றார் அவர்.

திராவிடர் கழகத்தைப்பற்றி, திராவிடர் கழகத்துக்காரர்கள் சொன்னால்தான் சரியாக இருக்கும்

எம்.. சோசியல் ஒர்க் என்கிற பிரிவில் ஒரு பாடம் - இயக்கங்களைப் பற்றி  சொல்லிக் கொடுக்கின்ற பாடம் இருக்கிறது. அதில் திராவிடர் கழகம் என்பதைப்பற்றி நீங்கள் தான் வகுப்பெடுக்கவேண்டும். அந்த வகுப்பில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வெழுதப் போகிறார்கள். எனவே, எங்களுடைய முதல்வரிடம் நான் சொன்னேன், திராவிடர் கழகத்தைப் பற்றிதிராவிடர்  கழகத்துக்காரர்கள்  சொன்னால் தான்  சரியாக இருக்கும் என்றேன். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டார்கள்.

அந்தக் கல்லூரிக்கு வகுப்பெடுக்க நான் சென்றேன். 40 மாணவிகளுக்குமேல் அங்கே இருந்தார்கள். ஆங்கிலத்தில் தான்  வகுப்பெடுத்தேன். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கும். வகுப்பு எடுப்பதை இடையில் நிறுத்தி விட்டு, மாணவிகள் யாருக்கும் சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்கலாம் என்று சொன்னேன்.

அந்த ஆண்டு திராவிடர் கழகம் பற்றிய கேள்வி இறுதித் தேர்வில் வந்தது; புரிந்திருந்ததால் நிறைய மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டதாக அந்த பேராசிரியை பிறகு என்னிடம் சொன்னார்.

ஏனென்றால், கேள்வி கேட்பதுதானே திராவிடர் கழகம்! திராவிடம் திராவிடம்  என்று  சொல்கிறார்கள் நிறைய பேர். கேள்வி  கேட்பதை  கற்றுக் கொடுத்தவரே தந்தை பெரியார் தான். சிதம்பரத்தில் ஒரு பார்ப்பனர், கேள்வி  எழுதிக்  கொடுத்துக்  கொண்டே இருந்தார்பெரியாரும் விடாமல் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். கேள்வி எழுதிக் கொடுத்த பார்ப்பனரின் பென்சில் முனை உடைந்துவிட்டதால், கேள்வி எழுதுவதை அவர் நிறுத்திவிட்டு, நின்றுகொண்டே இருந்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே இதனையும் அய்யா அவர்கள்  கவனித்துவிட்டுதன்னுடைய  பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்துக் கொடுத்து, கேள்விகளை எழுதுங்கள் என்றார்.

பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையில் யாரும் பதில் சொல்லவில்லை

திராவிடர் கழகத்துக்காரர்கள் கேட்ட கேள்விக்கு, பெரியார் கேட்ட கேள்விகளுக்கு  இதுவரையில்  யாரும் பதில் சொல்லவில்லை. மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்குத்தான் இன்றுவரையில் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மருத்துவர் தீபக்

அதேபோன்று, இந்தக் கூட்டத்தில் இன்னொரு சிறப்பு, நம்முடைய மருத்துவர் தீபக் அவர்கள். அவரை தனியாக ஒரு சிறப்புரை ஆற்றினார் என்றால்தான், அவருடைய கருத்துகளை முழுமையாக நாம் பதிவு செய்ய முடியும். இதுபோன்று இரண்டு, மூன்று முறை சிக்கல் வந்திருக்கிறது.

ஊனமுற்றோர்கள் என்று இவர்கள் சொல்கிறார்களே, அவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறார்களே, இவர் நல்ல முறையில் அழகாக சொன்னார், மூளையால் சிந்தியுங்கள், இதயத்தால் எங்களைப் பார்க்காதீர்கள் என்றார் ஒரே வரியில்.

பச்சாதாபப்படுவது, பரிதாபப்படுவதை அவர்கள் யாரும் விரும்பமாட்டார்கள். ஒரு மனிதனுக்குள்ள உரிமை, இன்னொரு மனிதனுக்கு வரவேண்டும் என்று சொல்லும்பொழுது, அந்த வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று சொல்லும்போது, பார்வையற்றவன், பார்வையற்றவன்  என்று சொல்கிறார்கள்; பார்வை  உள்ளவன்  எல்லாம் சரியாகப் பார்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறானா?

யாருக்கு கண்கள் இருக்கிறதோ, அவன் தான் பார்வையற்றவனாக இருக்கிறான்

பார்வையற்றவர்களாக யார் இருக்கிறார்கள் என்றால், யாருக்கு கண்கள் இருக்கிறதோ, அவன்தான் பார்வையற்ற வனாக இருக்கிறான். யார் பார்வையற்றவன் என்று உன்னு டைய அகராதியில் சொல்கிறாயோ, அவன்தான் விழிப்புடன் இருக்கிறான். இதுதான் இன்றைய சமுதாயமாகும்.

ஆகவே, இப்பேர்ப்பட்ட அற்புதமான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தோழர்களுக்கும், எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று நன்றியுரை கூறவிருக்கக்கூடிய தோழர் இன்பக்கனி.

இந்தத் தோழர் என்பது ஆண் - பெண் எல்லோரையும் சொல்லலாம் என்று  பெரியார்  சொன்னார்கடந்த  17 ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் சொன்னபடி அதிலிருந்து தோழர்கள்தான். இனிமேல் தோழியர்கள் என்கிற வார்த்தை கிடையாது.

திராவிடம் என்றால் என்ன?

அடுத்து நண்பர்களே, இந்தக் கூட்டத்தில் சகோதரர் திருமாவளவன் விளக்கமாக சொன்னார். திராவிடம் என்றால் என்ன? அதனுடைய அடிப்படை என்ன? என்பதைப்பற்றி யெல்லாம் சொன்னார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிடர் இயக்கத்திற்கு என்ன பெயர் தெரியுமா? இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. என்ன சொல்வார்கள் என்றால், சு.. கட்சி என்பார்கள். சு.. என்றால் சுயமரியாதைக் கட்சி என்று பெயர்.

நான் சு..தான்; நீ என்ன பு..வா?

அந்தக் காலத்தில் மிகக் கடுமையாக சொல்வார்கள், இங்கே அறிவுக்கரசு அமர்ந்திருக்கிறார் - அவருடைய தந்தையார் முரட்டு சுயமரியாதைக்காரர். தோழர் சுப்பிரமணியம் என்று பெயர். எனக்கு வாத்தியார் போன்றவர். அவரிடம் யாராவது சென்று, நீ சு.. கட்சிதானே? என்று கேட்டால், ஆமாம், நான் சு.. தான் - சுயமரியாதைக்காரன்தான் அதிலொன்றும் சந்தேகம் இல்லை. நீ என்ன பு.. வா? என்று கேட்பார்.

இதைக் கேட்டவர் திகைத்துப் போய் நின்றார்.

பு.. என்றால், புராண மரியாதைக்காரன் என்று அர்த்தம் என்பார்!

இப்படியெல்லாம்  சொல்லியவுடன் தான்  அடங்கினார்கள்அதைவிட அடுத்தக்கட்டமாக என்ன சொன்னார்கள் என்றால், இது பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்றார்கள்.

கிராமத்தில்  இருக்கிற  ஜாதி  வெறி காரணமாக, கருப்புச் சட்டைக் கட்சி என்று இப்பொழுது சொல்வார்கள். இந்த இயக்கத்திற்கு, பெரியாருடைய இயக்கத்திற்கு ஒரு தனித் தன்மை உண்டு.

மற்ற அரசியல் கட்சி நண்பர்கள் தவறாக நினைக்கக்கூடாது. இந்த இயக்கத்திற்கு ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால், அதோ போறான் பாருங்கள், கருப்புச் சட்டைக்காரன் என்பார்கள்.

இப்பொழுது கருப்புச் சட்டையைக்கூட வீணாக்கி விட்டார்கள். ஏனென்றால், எல்லா கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையை தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருப்புச் சட்டை இல்லாத கட்சிக்காரர்களே  கிடையாதுஅவ்வப்பொழுது  தேவைப்படும் பொழுது அணிந்து கொள்வார்கள்.

கொள்கையை சொல்லி என்னுடைய ஆளைத் திட்டுவான்

நெற்றியில் நாமம் போட்டிருக்கிறான், கருப்புச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். ஆகவே, இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒவ்வொருவருக்கும் கருப்பு ஒவ்வொரு காலகட்டத்தில் மருத்துவமாகத் தேவைப்படுகிறது.

எங்கள் கட்சிக்கு பெருமை என்னவென்றால், அய்யா அவர்கள் சொல்வார், கொள்கையைச்  சொல்லி  என்னுடைய  ஆளைத்  திட்டுவான் என்பார்.

யோவ், அதோ போறானே, அவன் யார் என்று தெரியுமா?

ஆமாம், யார் அவர்? என்று இன்னொருவர் கேட்பார்.

அதான்யா, சாமி இல்லை என்று சொல்கின்ற கட்சிக்காரன்யா என்று மிகச் சுலபமாக சொல்வார்.

ஒரு வரியில் சொல்லிவிட்டான் பாருங்கள்.

இதுபோன்று கொள்கைப்  பெருமையுள்ள  கட்சி  இந்த  இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கத்திற்கும் கிடையாது.

இதைப் போய் இன்றைக்குப் பைத்தியக்காரத்தனமாக சில புதிய அறிவாளிகள் வந்திருக்கிறார்கள் பாருங்கள், கோயங்கா வீட்டு பழைய கணக்குப் பிள்ளை. அவர் இப்பொழுது வந்திருக்கிறார். திடீரென்று அவருக்கு ஓர் ஆசை. அது ஏதோ துக்ளக் பத்திரிகையினுடைய ஆசிரியர் பதவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார், டக்கென்று இவர் போய் உட்கார்ந்து விடுவதற்கு.

ஆட்சி என்பது அதுவல்ல. இன்றைக்கு அவர்களின் கைகளில் ஊடகங்கள் இருக்கின்றன என்பதற்காக எதுவும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். இதோ என் கைகளில் இருப்பது நேற்று வெளிவந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.

திராவிடம் தோற்றுப் போய்விட்டது என்கிறார் ஒரு பெரிய அறிவாளி

இன்றைக்கு  நிறைய  பேருக்கு  ஆசை  வந்துவிட்டதுமுதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்துவிட்டார். அடுத்தது யார் முதலமைச்சர்? என்று வந்தவுடன், பத்திரிகைகளில் கொஞ்சம் விளையாடிப் பார்க்கிறார்கள். அதாவது திராவிடம் தோற்றுப் போய்விட்டது என்கிறார் ஒரு பெரிய அறிவாளி. சோ எவ்வளவு அறிவாளி என்று எங்களுக்குத் தெரியும். அவருக்கும் தெரியும். என்னிடம் பேசும்பொழுது சொல்வார், விவாதம் செய்யும்பொழுது சொல்வார்.

நான் ஓர் ஆதாரத்தைக்  காட்டி, பகவத் கீதையைப்பற்றி பெரிய அளவில் சொல்கிறீர்களே, பெண்களையும், சூத்திரர்களையும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று எழுதியிருக்கிறதே? என்றேன்.

நீங்கள் ஆதாரத்துடன்தான் சொல்வீர்கள்!

உடனே சோ அவர்கள், அப்படியா, சார்! நீங்க படித்த அளவிற்கு பகவத் கீதையை நான் படிக்கவில்லை என்று மிகச் சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பித்துக் கொள்வார்.

நான், உங்களுக்கு அதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா? கீதை புத்தகத்தை எடுக்கட்டுமா? என்றவுடன்,

சார், சார் புத்தகத்தை எடுக்கவேண்டாம்; நீங்கள் ஆதாரத்துடன்தான் சொல்வீர்கள் என்று தெரியும் சார் என்பார்.

தன்னைத் தானேயே தாழ்த்தி, அதன்மூலம் பத்திரிகையாளராக வந்தவர் சோ!

சோ அவர்கள், அப்படி, இப்படி என்று பத்திரிகையை நடத்திக் கொண்டு சென்றார்  என்றால்சர்க்கஸ் கம்பெனியில்  கோமாளிகள் போன்று வருகிறவர்கள், தாங்களே கீழே விழுந்து மற்றவர்களை சிரிக்க வைப்பதுபோன்று, அவர் தன்னைத் தானேயே தாழ்த்தி, அதன்மூலம் பத்திரிகையாளராக வந்தவர்.

அதுபோன்று இப்பொழுது வந்திருப்பவர் செய்ய முடியாது.

சோ அவர்கள் சொல்வார், சார், நான் ஒரு கட்சியை ஆதரிக்கிறேன் என்றால், அந்தக் கட்சி நிச்சயம் வெற்றி பெறாது என்று சொல்லிவிட்டு ஆரம்பிப்பார்.

ஆகவே, அந்த இடத்தில் நாங்கள் போய் உட்கார்ந்துவிட்டோம். அதனால் கனவு காண்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, குருமூர்த்தி என்ற ஒருவர், நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்,
‘Hindu gods defeated Dravidianism in Tamil Nadu’ என்ற தலைப்பில் ஒரு செய்தி.

திராவிட இயக்கத்தை, திராவிடத்தை இப்பொழுது வீழ்த்துவதற்கு இவர்களால் எல்லாம் முடியவில்லை. யாரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் தெரியுமா? Hindu gods   அதிலும் முஸ்லிம் கடவுள் இல்லை, கிறித்துவ கடவுள் இல்லை - இந்துக் கடவுள். ஏனென்றால், இந்துக் கடவுள்தானே ஆயுதம் தூக்கிக் கொண்டு வருகின்றன. மிகப்பெரிய அளவிற்கு, வேலாயுதம், சூலாயுதம்பற்றியெல்லாம் அய்யா சொல்லுவார்.
இவன் அன்பே சிவம் என்று சொல்லிவிட்டு, ஏண்டா திருட்டுப் பய, கொள்ளைக்கார பய, வழிப்பறிக்காரன் கைகளில் இருக்கவேண்டிய ஆயுதத்தையெல்லாம் உன்னுடைய கடவுள் கைகளில் கொடுத்திருக்கிறாயேடா, இவர்கள் எல்லாம் கடவுளா? என்று பெரியார் கேட்பார்.

அந்தத் தலைப்புக்கு என்ன அர்த்தம் என்றால், திராவிட இயக்கம் தோற்றுப் போகிறதாம். எதனால் தோற்றுப் போகிறது என்று பெரிய ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்.

நிறைய  பேர்   சபரிமலை  அய்யப்பன்  கோவிலுக்குச்  செல்கிறார்களாம்; அதேபோன்று மேல்மருவத்தூர் கோவிலுக்குச் செல்கிறார்களாம்; அதேபோன்று பழனி முருகன் கோவிலுக்கும் நிறைய பேர் செல்கிறார்களாம்.
தலைவர்களை நம்புவதைவிட, இப்பொழுது கடவுளை நம்ப ஆரம்பித்துவிட்டார்களாம்.

தயவு செய்து அவரை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். கடவுள் பிரச்சினைபற்றி பிறகு வைத்துக் கொள்ளலாம்.


நம்முடைய தமிழ்நாடு காவல்துறையில் ஒரு பிரிவு இருக்கிறது. அந்தப் பிரிவிற்கு பொன்.மாணிக்கவேலு என்பவர் தலைவராக இருக்கிறார். அந்தப் பிரிவுக்கு என்ன பெயர் என்றால், கடத்துகின்ற கடவுள்கள் சிலைகளையெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு வருவது. இப்பொழுதுகூட பாண்டிச்சேரியில் நிறைய பேரைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.



நூல் : திராவிடத்தால் எழுந்தோம்!
ஆசிரியர் :  கி.வீரமணி  

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!