எல்லைச் சிக்கலும் திராவிடக் கட்சிகளும்

தமிழ் தெலுங்குப் பிராமணரான இராஜாஜிக்குத் தாய்த் தமிழகத்தின் எல்லைகளை மீட்க வேண்டும் என்பதிலிருந்த அக்கறைகூடத் திராவிட இயக்கத்தினருக்கு இல்லை.
தமிழக எல்லைகளைக் காக்கத் தவறினார். தமிழகப் பகுதிகள் பறிபோவதைத் தடுக்கவில்லை. அதற்கு முயன்ற .பொ.சி. போன்றோருக்கும் ஆதரவு அளிக்கவில்லை.
சென்னையைத் தெலுங்கர் பறித்துக் கொண்டு போகாமல் காத்தவர் இராஜாஜி ஆவார் என்று கூறி திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் பெரியார், அண்ணாமீது குற்றம் சுமத்துகிறார் குணா.
பெரியார் எதற்காகப் போராடினாரோ அதற்கே முன்னுரிமையும் முனைப்பும் காட்டினார். அவரைப் பொறுத்த வரை திராவிட நாடு கோரிக்கையினை முன்வைத்து, தமிழர், மலையாளி, கன்னடர், தெலுங்கர் நால்வரையும் ஒருங்கிணைத்து, இந்தியாவினின்று திராவிட நாட்டைப் பிரித்து, தன்னாட்சி நாடாக, தனி அரசியல் சட்டத்தின்படி ஆளப்படும் நாடாக உருவாக்கி, ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கமற்ற, சம உரிமையுடைய, தன்மானத்துடன் கூடிய வாழ்வை திராவிடர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது ஆகும். பெரியாரின் விருப்பம், திட்டம், முயற்சி எல்லாம் இவையே.
ஆனால், இவை நிறைவேறாது போனதாலும், அதற்குத் தமிழர்களைத் தவிர மற்றவர்கள் (தெலுங்கர், கன்னடர், மலையாளி) விழிப்பற்று ஆரிய அடிமைகளாய் அவர்களின்
ஆதரவாளர்களாய் நின்றதாலும் தமிழ்நாடு தமிழர்க்கு என்னும் கோரிக்கையை முன்வைத்தார். அச்சூழலில் மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்டதும் அதற்கான வாய்ப்பும் அற்றுப் போனதாய் உணர்ந்தார். இனி ஒன்றுபட்ட இந்தியாவில் மத்திய அரசின் கட்டுக்குட்பட்டு, மாநிலங்கள் செயல்படும் வாய்ப்பு மட்டுமே உண்டு என்ற நிலை வந்ததும், மாநில எல்லைகளைப் பற்றி கவலைப்படாது கிடைக்கின்ற எல்லைக்குள் ஆரியப் பார்ப்பன ஆதிக்கமற்ற, தன்மான, சமஉரிமை வாழ்க்கைத் தமிழர்க்கு கிடைக்க வழி செய்தால் போதும். எல்லை  கூடி என்ன குறைந்து என்ன என்ற வெறுப்பிற்கு அவர் வந்த நிலையில்தான் .பொ.சி. போராட்டம் வந்தது. அப்போதுதான் எல்லைச் சிக்கலுக்கு முன்னுரிமை அளிக்காது கீழ்க்கண்டவாறு பேசினார்.
பிரிவினையைப் பற்றி என் கருத்து, உங்கள் எல்லோருக்கும். முழு விடுதலையும் பிரிவினையும் வேண்டும் என்பவன் நான். அந்த அளவில் எல்லை குறைவாகக் கிடைத்தாலும் கவலை இல்லையென்று சொன்னவன் நான். இன்று காலையிலுங்கூட, டாக்டர் . கிருஷ்ணசாமி அவர்களிடம், எனக்குச் சென்னை நகரம் பெரிதன்று. அயலான் ஆதிக்கமற்ற, அயலான் சுரண்டலற்ற, முழுத் தன்னுரிமையுடைய பகுதி எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதுதான் தேவை என்று சொன்னேன்.
நான் நிலப்பரப்புக்காக போராடுகிறவன் அல்ல; விடுதலைக் காகப் போராடுகிறவன். என்றாலும் சென்னை நமக்கு வேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன். காரணம், மொழிவழி மாநிலம் வேண்டும் என்று சொல்லி வருகிறவர்கள், மொழி வழியாகவும் பிரித்துக் கொண்டு, தம் மொழி அல்லாத நாட்டிலும் மேலாண்மை செலுத்தப் பார்க்கிறார்களே என்ற ஒரே காரணத்துக்காகத்தான். நாம் முயற்சிக்காவிட்டால் சென்னை நகரம் ஆந்திரர்களுக்குப் போய் விடுமோ என்ற கவலை சிறிதும் வேண்டிய தில்லை. ஏனெனில் பெரும்பான்மை தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சென்னையில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் சென்னை ஆந்திராவுடன் சேரவோ, அதைத் தனி மாகாணமாக ஆக்கவோ உடன்பட மாட்டார்கள். அவர்கள் சென்னையைத் தமிழ்நாட்டோடு சேர்ப்பதில் வெற்றி பெற்றே தீருவார்கள். ஆதலால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லையென்று காலையில்தான் சொன்னேன்.
இவைதான் பெரியார் எல்லைப் பிரிவினைப் பற்றி, வெளிப் படையாக ஒளிவுமறைவின்றி உண்மை நிலையை அப்படியே சொன்னவை.
மேற்கண்ட அவரது பேச்சு மூன்று முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.
1.விடுதலை பெற்ற தன்னாட்சி தமிழ்நாடு வேண்டும். அப்படி கிடைக்குமாயின் சில பகுதிகளை இழந்தாலும் எனக்குக் கவலையில்லை.
2.மொழிவாரி மாநிலம்தான் என்று முடிவில் எல்லை வகுக்கும்போது, பிற மொழியார் நம் எல்லையை பறித்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. மொழிவாரி என்று வந்தபின் நம் எல்லையைவிட்டுத் தர முடியாது.
3.சென்னையை நம்மோடு வைத்துக் கொள்ள நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. பார்ப்பனர்களே அதற்குரிய வேலையைச் செய்து சென்னையைத் தமிழ்நாட்டோடு தக்க வைப்பர்.
இந்த மூன்றில் எந்தக் குறையும் இல்லை. குற்றமும் இல்லை. இதில் என்ன குறை கண்டார் குணா? இரண்டக வேலை (துரோகம்) பெரியார் செய்துவிட்டதாக அபாண்ட பழியை அர்த்தமில்லாமல் சுமத்தி பெரியாரைத் தமிழர்கள் வெறுக்கும்படி சூழ்ச்சி செய்கிறார். இட்டுக்கட்டிப் பழி சுமத்துகிறார். இதில் பெரியார் செய்த தவறு எதுவுமில்லையே!
பெரியார் சொன்னதுபோல சென்னையை மீட்பதில் இராஜகோபாலாச்சாரி உட்பட பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத் திற்காகப் பெரும் முயற்சி மேற்கொண்டு சென்னையைத் தமிழ்நாட்டுடனே இருக்கச் செய்தனர்.
பெரியார் எதிலும் ஒளிவுமறைவு இல்லாமல் உண்மையைப் பேசக் கூடியவர். அந்த அடிப்படையில் அவர் அன்றைய காலச் சூழலுக்கும், கவனம் செலுத்த வேண்டியது முதலில் எதற்கு என்ற நோக்கிலும் சொல்லிய கருத்துக்களை 70 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்து வைத்துக் கொண்டு திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது ஆரியப் பார்ப்பனர்களுக்கே வலு சேர்க்கும். தமிழர்க்கு இதனால் கேடுதான் நேரும்! தமிழர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்!
எல்லா போராட்டங்களிலும் பெரியாருக்கு எதிராகவும், இராஜாஜிக்கு ஆதரவாகவும் செயல்பட்ட .பொ.சி. எல்லை மீட்புப் போராட்டத்தில் பெரியாரைத் தனக்கு உதவியாக நிற்கும்படி வேண்டினார். அப்போது பெரியார், எல்லை மீட்பில் உங்களோடு நான் இணைந்து போராட நீங்கள் அய்ந்து நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று .பொ.சி.யிடம் சொன்னார். ஆனால், அதை .பொ.சி. ஏற்கவில்லை.
பெரியார் சொன்ன நிபந்தனைகள்
1. தமிழகத்தின் எல்லைகளைக் காப்பதும் தக்க வைத்துக் கொள்வதும் என்பதில் உடன்பாடு (நம்முள் கருத்து ஒற்றுமை) வேண்டும்.
2.      இந்தி எதிர்ப்பில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.
3.      படை, போக்குவரத்து, அயலுறவு போன்றவை தவிர, பிற அதிகாரங்கள் யாவும் மாநில அரசுகளிடமே இருத்தல் வேண்டும் என்பதற்கு நாம் போராட வேண்டும்.
4.      சென்னை அரசு என்பதை மாற்றி அதற்குத் தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும் என்பதற்குப் போராட வேண்டும்.
5.      தென்மண்டலம் (தட்சண பிரதேசம்) என்னும் திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
மேற்கண்ட பெரியாரின் அய்ந்து நிபந்தனைகளும் நியாயமானவை, தமிழரின் நலனுக்கு முழுக்க முழுக்க ஏற்றவை. எல்லா தமிழனும் ஏற்க வேண்டியவை. இதை ஏற்காத .பொ.சி.யைக் கண்டிப்பதற்குப் பதிலாக, குற்றம் சொல்வதற்குப் பதிலாக பெரியாரைக் குற்றம் சொல்கிறார் குணா என்றால், அவரின் நோக்கம் என்ன, அவரின் தரம் என்ன என்பதைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
.பொ.சி. பெரியாரின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளாத போதும், தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் மீட்புப் போராட்டங்களில் தி..வும், தி.மு..வும் கலந்து கொண்டன. கடையடைப்பு வேலை நிறுத்தம் செய்தன. ஆனால், அதை பெருந்தன்மையோடு பாராட்ட மனமில்லாத குணா, ஒப்புக்குக் கலந்து கொண்டு நாடகமாடினார் என்று கொச்சைப்படுத்துகின்றார். அது மட்டுமல்ல, தமிழர்க்குப் பெரியார் செய்த நல்லதை எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லி பெரியாரின் பெருமையைக் குலைக்கிறார். எடுத்துக்காட்டாக, இட ஒதுக்கீட்டிற்குப் போராடி இந்திய அரசியல் சட்டத்தையே முதன் முதலாகத் திருத்தச் செய்து, பிற்பட்ட மக்கள் கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னேற வழி செய்தார். இதனால் ஆயிரமாயிரம் தமிழர்கள், அவரது தலைமுறை மேலெழுந்து நிற்கிறது. 69 சதவிகிதம் இடங்கள் இன்றைக்கு அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கிறது. இந்த இமாலய சாதனையை மறைத்து, இதனால் எந்தப் பயனும் இல்லை. இட ஒதுக்கீட்டுப் பயன் தமிழரல்லாதாருக்கே கிடைக்கிறது என்று உண்மைக்குப் புறம்பாய் கூறுகிறார்.
இட ஒதுக்கீட்டுப் பயன் தமிழர் அல்லாதாருக்குக் கிடைத்தால் இடஒதுக்கீடு கேட்டு பா... ஏன் போராட்டம் நடத்தியது. ஏன் மற்ற ஜாதியினர் போராட்டம் நடத்துகின்றனர். இன்றைக்கு ஒதுக்கீடு வந்த பின் ஏராளமான வன்னியர் பயன் பெறுகின்றனரே இவர்கள் தமிழர்கள் அல்லவா? தமிழர்களே குணாக்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்


Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!