டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - பகுதி -2

இதே 1906ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியிலும்தண்டையார்பேட்டையிலும் மாநகராட்சிப் பணிகள்பற்றி நாயர் சொற்பொழிவாற்றியதாகப் பலரும் குறிப்பிடுகின்றனர்இவ்வாறு ஓர் இடத்தில் உரையாற்றும் நாயர்உடனே அப்பகுதியில் மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் குறித்த தீர்மானத்தை அவையில் கொண்டு வருவது வழக்கம்இவ்வாறு டாக்டர் நாயர் கொண்டு வந்த ஒரு தீர்மானம்தான் இவருக்கும்வெள்ளுடை வேந்தர் தியாகராயருக்கும் இடையே கருத்து மாறுபாட்டை உருவாக்கியது என்பதை திரு.எஸ்.ஜி.மணவாளஇராமனுஜம் என்பவரும் (நீதிக்கட்சி பொன்விழா மலர்பக்கம் 90), சேலம் திரு.வீ.ஆர்.சந்திரன் என்பவரும் (நீதிக்கட்சி வரலாறுபக்கம் 13) திரு.கோ.குமாரசாமியும் (திராவிடப் பெருந்தகை தியாகராயர்பக்கம் 304) குறிப்பிடுகின்றனர்இவர்களின் கருத்து மாறுபாடு நீங்கிய வரலாற்றைப் பின் பகுதியில் விரிவாகக் காண்போம்கருத்து மாறுபாடு ஏற்பட்டதற்கான காரணம்மேற்குறிப்பிட்ட இருவர் தரும் செய்திகள் இவைதான்:
தண்டையார் பேட்டையில் இருந்த கழிவு நீர்த்தேக்கம் பற்றிய நடவடிக்கைகளில் சிறிய கருத்து மாறுபாடு (மாநகராட்சியில்கொண்டிருந்த சர்.தியாகராய செட்டியாரையும்டாக்டர் டி.எம்.நாயரையும் இணையச் செய்த பெருமை டாக்டர் நடேச முதலியாரையே சாரும் என்கிறார் திரு.எஸ்.ஜி.மணவாளஇராமானுஜம்ஆனால் திரு.வீ.ஆர்.சந்திரன் தம்முடைய நூலில்,
அக்காலத்திலும் ஓர் வினோத சம்பவம்திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் எதிரில் உள்ள தெப்பக்குளம் - இப்பொழுது போன்றே அப்பொழுதும் - ஒரே பாசி படர்ந்துபோய்வாரம் ஓரிரு தற்கொலைப் பிணம் மிதக்கும் அவல நிலைகொசுக் கோஷ்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக காட்சியளிக்கும்மலேரியா பரவிய வண்ணமிருக்கும்பலர் பலியுமாவர்மருத்துவ சுகாதார விற்பன்னராம் மாதவனாருக்கு இவ்வகோரங்கள் வேதனை விளைவிக்கவேகார்ப்பரேஷனில் ஒரு தீர்மானம் கொணர்ந்தார்சென்னை நகர் சுகாதாரத்தைக் கருதிஇப்பாழாய்ப் போன தெப்பக்குளத்தை மூடி அங்கோர் அழகான பூங்கா நிறுவுதல் நலமென்றார்எழுந்தார் தியாகராய செட்டியார்பாம்பெனச் சீறினார்பரம்பரை வைதீகராம் தியாகராயருக்கு நாயரின் பேச்சு நாராசம் போன்றிருந்ததுஅட சண்டாளமேநீரோர் ஹிந்துவென்று சொல்லிக்கொண்டே ஹிந்து மதச் சின்னமான புனிதமான கோயில் தெப்பக் குளத்தைத் தூர்க்கச் சொல்கிறீரேஎன்று பல கவுன்சிலர்களுடைய பலேபலே என்ற ஆரவாரத்திடையே அதுவரை சற்சூத்திரராயிருந்த தியாகராய செட்டியார் ஆர்ப்பரித்தார்மாதவர் மவுனியானார்தீர்மானம் தோற்றதுஅன்றிலிருந்து இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை.
எனச் சிறிது கற்பனை நயமும் கலந்து குறிப்பிடுகின்றார்இதே நிகழ்ச்சியை திரு.கோ.குமாரசாமி,
சென்னை நகரத்துக்குப் புதியதொரு சாக்கடைத் திட்டம் தேவை எனக்கூறி அத்துறையில் அரசும் நகராட்சியும் கவனம் செலுத்தும்படிசெய்துதம் பதவிக் காலத்திலேயே அத்திட்டத்தை நிறைவேறச் செய்தது நாயரின் மற்றோர் மாபெருஞ் செயலாகும்இத்திட்டம் தண்டையார்பேட்டைக் கழிவு நீர்த்திட்டம் எனப் பெயர்பெற்றுச் சென்னை மக்களின் நீண்ட நாள் பேச்சுக்கும் விவாதத்துக்கும்இலக்கான திட்டமாகும்சர்.தியாகராயருக்கும் நாயருக்குமிடையே வேற்றுமை ஏற்படுவதற்கு இத்திட்டம் காரணமாக அமைந்தது எனத் தெரிய வருகிறது எனக் குறிப்பிடுகின்றார்.
தெப்பக்குளம் தண்டையார் பேட்டையோதிருவல்லிக்கேணியோ எங்கிருந்ததாகஇருந்தாலும் இருவருக்குமிடையில் கருத்து மாறுபாடு ஏற்பட மாநகராட்சியில் நாயர் கொண்டு வந்த தீர்மானம் காரணமாயிற்று என்பது உறுதியாகிறதுஇக்கால கட்டத்தில் பழமைக்கும்புதுமைக்கும் நேர்ந்த கருத்து மாறுபாடாகவே இதைக் கொள்ளலாம்ஏனெனில் சர்.தியாகராயர்தான் ஒரு இந்து என்ற பிடியில் இருந்து விலகாத நிலைடாக்டர் நாயரும் பார்ப்பனர்களால் தனக்கே பிற்காலத்தில் நிகழப்போகும் கெடுதல்களை உணர முற்படாமல் அறிவியல் நெறியான முன்னேற்றத்தை மட்டுமே வலியுறுத்தி வந்த நிலைஇவ்விருவரின் மாற்றங்களை விரிவாகப் பிறகு காண்போம்.
இவ்வாறு மாநகராட்சியில் ஆற்றிய பணிகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக விளங்கின.
அவர் ஊராட்சிநகராட்சி சீர்திருத்தத்தில் காட்டி வந்த ஊக்கம்சென்னை மாகாணம் முழுவதும் நன்கு அறிந்ததாகும்.
என இந்து நாளேடு பாராட்டுமளவிற்கும்முன்பே குறிப்பிட்டபடி பாரதியார் பாராட்டுமளவிற்கும் சிறந்திருந்தன அவருடைய மாநகராட்சிப் பணிகள்.
மக்களின் பிரச்சினைக்காகப் போரிடும் வீரனாகவும்அதில் வெற்றி பெறும்வரை ஓய்வின்றி உழைப்பவராகவும்எந்நேரத்திலும் சிக்கல்களைத் தீர்க்காமல் உடன்பாடு (ஊடிஅயீசடிஅளைநகாண்பதை வெறுத்தவராகவும் இருந்தார் நாயர்இவர் ஆற்றிய பணிகளால் மகிழ்ந்த மக்கள் இவரைத் தென்னிந்தியாவின் பெரோஷ் ஷா மேத்தா என்று அழைத்தனர்சுருங்கக் கூறின்,
இவர் ஒரு பிறவித் தலைவர் - இவருடைய ஆளுமைத் திறன் நாடெங்கிலும் இருந்த மக்களை ஈர்த்தது என்கிறார் வரலாற்றறிஞர் ஒருவர்.
சென்னை நகராட்சியில் அவர் காலத்தில் நகர சுகாதாரத் (ழநயடவாதுறையுடன் இணைக்கப்பட்டிருந்த (ளுயவையசல)நகரத் துப்புரவுகளைத் தனியாகப் பிரித்து அவைகளை நகரத்துப்புரவுத்துறை எனத் தனித்துறை ஏற்படுத்தியவரும் டாக்டர் நாயர்தான்.
நகராட்சி ஊராட்சிபற்றிய அவருடைய தேர்தல் பேச்சுக்கள் மற்றவர்களுக்கும் வருங்காலத்தவர்களுக்கும் வழிகாட்டியாகவும்முன்மாதிரியாகவும் அமைந்தன என்கிறது இந்து நாளேடு (22.07.1919).
இத்தகைய சிறப்பான இவருடைய மாநகராட்சிப்பணி 1914இல் அவைக்கு வந்த வாதத்தால் முடிவடைந்ததுஇச்செய்தியைத் திரு.கோ.குமாரசாமி:
1914ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் திருக்குளத்துக்கு வரி இல்லாமல் தண்ணீர் விட வேண்டுமென்று நகரசபையில் ஒரு பேச்சு எழுந்ததுஇப்பேச்சு இதற்கு முன்னரேநீண்ட காலமாக வாதப் பிரதிவாதங்களாக உருவாகி நின்றதாகும். 1908 ஆம் ஆண்டில் தீர்மானித்தபடி பார்த்தசாரதி கோயில் திருக்குளத்துக்கு வரி இல்லாமல் தண்ணீர்விட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தியாகராய செட்டியார் கொண்டு வந்தார்இத்தீர்மானத்தை ஆதரித்துச் சிலரும்எதிர்த்துச் சிலரும் பேசினார்கள்டாக்டர் நாயர் முன் ஆண்டுகளில் பேசியதுபோலவேதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் திருக்குளத்துக்கு வரியில்லாமல் தண்ணீர்விட்டால்மற்ற கோயில் குளங்களுக்கும் வரியில்லாமல் தண்ணீர் விடவேண்டி வரும் என்றும்இந்தச் செலவை நகரசபை ஏற்கவேண்டியிருக்கும் என்றும் கூறினார்இவரை ஆதரித்துப் பேசியவர்களில் திரு.ஜி..நடேசனும் ஒருவராவார்அவர்பார்த்தசாரதி கோயில் திருக்குளம் பொதுக்குளம் அல்லவென்றும்கோயிலுக்குச் சொந்தமான குளம் என்றும்பல ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ள இந்தக் கோயில் நகரசபைக்கு வரி செலுத்தித் தண்ணீர் பெறுவதே நேர்மையென்றும் பேசினார்இவ்விவாதம் திருவல்லிக்கேணி மக்கள் ஒரு சாராரிடையே நாயரின்மேல் அதிருப்தி கொள்ளச் செய்ததுஅவர்கள் டாக்டர் நாயரை நகரசபையிலிருந்து விலகிடும்படி பேசியும் எழுதியும் வரலாயினர்இச்செயல்கள் நாயரை வேதனையடையச் செய்தனஇனி நகரசபையில் நேர்மையுடன் தொண்டாற்ற இயலாது என்று எண்ணினார்தான் ஆசிரியராக இருந்து வந்த மதராஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகையில் நகர சபையில் நேர்மையாகவும் நியாயமாகவும் பாடுபடுவதற்கு இனி இடமில்லை என விளக்கமாக எழுதித் தம்முடைய நகரசபைக் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் தெரிவித்தார்நாயரின் இச்செயல் நகர மக்கள் எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்தியதுஅவரை எதிர்த்தவர்கள் கூட வருத்தப்பட்டார்கள்ராஜினாமாவைத் திரும்பப்பெறக் கோரினார்கள்நாயரோ தம் முடிவை மாற்ற இயலாது எனக் கூறிவிட்டார்இத்தகைய வருந்தத் தக்க நிகழ்ச்சியுடன் டாக்டர் நாயரின் நகரசபைத் தொண்டு முடிவடைந்தது எனக் குறிப்பிடுகின்றார்.
கேரளத்தில் பிறந்த நாயர் சென்னையிலும்இங்கிலாந்திலும் கல்வி கற்றார் - ஈடிணையில்லா மருத்துவராகி மக்களுக்குத் தொண்டாற்றினார் - போர்முனையில் ஊனமுற்றவர்களுக்கு உதவினார் - உண்மையான காங்கிரசுக்காரராக இருந்தார் - சென்னை மாநகராட்சியில் புகழின் உச்சிக்கே சென்றார் - இவை அனைத்தும் டாக்டர் நாயரின் வாழ்வில் பெரும்பாலும் அமைதியான சுவடுகள் என்றே கூறலாம்.
டாக்டர் நாயரின் வாழ்வில் மற்றொரு பகுதியும் உண்டுஅங்கே அவர் ஒரு முழு நேரப் போர்வீரன்சீறிவரும் புயல்மாற்றாரின் கூற்றுவன்மனம் கவரும் பேச்சாளன்ஈட்டி வீசும் எழுத்தாளன்மக்களை விடுவிக்கத் தன் வாழ்நாள் முழுவதும் மணம்புரியாமலே வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகன்அப்பகுதியையும் நாம் காண வேண்டுமல்லவாஅதற்குமுன் கேரளத்திலும்தமிழகத்திலும் மக்களை வாட்டிக் கொண்டிருந்தசாதீயத்தின் சரித்திரத்தையும் சற்றுக் கண்டுசெல்வோம்.

நீதிக்கட்சியில்
இந்நூற்றாண்டின் தொடக்கத்திலும், அதற்கு முன்பும் கேரளத்தில் ஜாதிப்போராட்டங்கள் அதிகமாக இருந்தன. கேரளத்தில் பயணம் செய்த எஃப், புச்சாமேன் (F.Buchaman)  என்பவர் தம்முடைய பயணக் குறிப்பை எழுதும்போது கேரளத்தில் இருந்த ஜாதீயக் கொடுமைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
தீண்டத்தகாத பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் மிருகத்தனமான முறையில் தண்டிக்கப்பட்டனர். சாணான் இனப் பெண் ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருந்த ஒரு நம்பூதிரிப் பார்ப்பனர் தண்டனை என்ற முறையில் குருடாக்கப்பட்டார். அப்பெண்ணுக்கும் அதே தண்டனைதான். இவைமட்டுமின்றி அப்பெண்ணின் உறவினர்கள் சாகடிக்கப்படுவார்கள் அல்லது மாப்ளா எனப்படும் கேரள இஸ்லாமிய இனத்தவருக்கு அடிமைகளாக விற்கப்படுவார்கள். - இந்த இஸ்லாமியர் அடிமைகளாகப் பெற்றவர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.
இவை மட்டுமல்ல; கேரளத்தின் தன் காலத்து நிலையை சங்ககாலத்தோடு ஒப்பிட்டு நோக்கிய பேராசிரியர் குஞ்சன் பிள்ளை என்பவர் பண்டைய கேரளம் என்ற தன்னுடைய நூலில் தரும் குறிப்பு இது:
எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் மேலாடையும் கச்சும் அணிந்திருந்தனர் (நெடுநல்வாடை வரி 136) நாடார்ப் பெண்களின் ரவுக்கையை அவிழ்க்கச் செய்த நாயர்குல வீரர்களும், கையில் பிரம்போடு வாயில் மாடத்தில் காத்திருந்து நாயர்ப் பெண்களின் ரவுக்கையை அவிழ்க்கச் செய்த நம்பூதிரிப் பண்ணையார்களும் அன்றில்லை (சங்க காலத்தில்)
1859 ஜூலை 26ஆம் தேதி விடுக்கப்பெற்ற திருவிதாங்கூர் மன்னரது பிரகடனத்துக்குக் காரணமாயிருந்த நிகழ்ச்சிகளே இங்கு சுட்டப்படுகின்றன.
இக்குறிப்பிலிருந்து கேரளத்தில் ஜாதீயத்தின் வெறியாட்டத்தை நன்கு அறியலாம். நாயரின் பிறப்பு 1868இல். அவர் பிறப்பதற்கு முன்பே ஜாதிகள் பிறந்து வளர்ந்து, போரிடத் தொடங்கிவிட்டிருந்தன கேரளத்தில். இம்மண்ணிலும் ஜாதியை ஒழிக்கப் பலர் முயன்றனர் என்பதை, கேரள மாநிலம் என்ற நூலில் அதன் ஆசிரியர் திருமதி சரஸ்வதி ராம்நாத் பின்வருமாறு கூறுகிறார்:
இந்துக்களுக்குள் இங்கு (கேரளாவில்) ஜாதிப் பிரிவுகள் உயர்வு தாழ்வுகளும் அதிகமாயிருந்தன. நம்பூதிரி, நாயர், மேனன், குரூப், பணிக்கர், பிள்ளை, நம்பியார், உண்ணித்தான், வாரியார் எனப்பல இனப்பிரிவுகள் உள்ளன. தீயர்கள், ஈழவர்கள் வட கேரளத்தில் அதிகம் வாழ்கின்றனர். சிங்களத்திலிருந்து வந்து குடியேறியதாகக் கூறப்படும் இவர்கள் ஆயுர்வேதமுறை வைத்தியப் புலமை பெற்றிருந்தனர். தாழ்ந்த குலத்தவரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட நாராயணகுரு, சட்டாம்பி ஸ்வாமிகள் போன்ற மகத்தான சீர்திருத்தவாதிகள், ஒன்றே மதம், ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் எனப் போதித்துத் தீண்டாமையை ஒழித்தனர்.
இத்தகைய ஜாதிக் கொடுமைகளில் சிக்கித் தவித்த கேரளம், டாக்டர் நாயருக்கும் ஜாதீயத் தொடர்பான சிந்தனைகளை விதைத்திருக்கும் என்றே கருதவேண்டியுள்ளது. மேலை நாட்டு நாகரிகத்தில் திளைத்த நாயர் தன் நாட்டில் மனிதனை மனிதன் இழிவுப் படுத்துவதைக் கண்டு மனம் பதைத்திருப்பார் என்பதில் அய்யமில்லை. இதனை,
கேரளத்திலே பார்ப்பனர்கள், பிறருக்குச் செய்யும் கொடுமைகளைக் கண்டு மனம் புழுங்கித் தன்னுடைய வலிமை மிகுந்த பேனாவினால் கருத்தாழம், காரண காரியத்துடன் படிக்கப் படிக்கத் தெவிட்டாத கட்டுரைகளை ஆங்கிலேயரே வியந்து போற்றும் ஆங்கிலத்தில் எழுதினார்.
எனத் திரு.கே.பரமசிவம் தரும் குறிப்பு உறுதிப்படுத்துகிறது.
தன் சொந்த ஊரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த பிற இனத்து மக்களின் நிலைமையையும் அறிந்திருந்தார் நாயர். ஒரு பார்ப்பனன், பார்ப்பனரல்லாத குடும்பத்தில், தான் விரும்பிய ஒருத்தியைத் தனக்குரியவளாக நடத்துவதும், அதற்குச் சம்பந்தம் எனப்பெயர் சூட்டித் தலைமுறை தலைமுறையாய் நடைமுறைப்படுத்தி வந்ததும், காலப்போக்கில் பார்ப்பனனின் ஆதிக்கத்திற்குட்பட்டுவிட்ட அப்பெண்ணின் குடும்பம், முழு அளவில் தன்னுடைய உரிமைகளையெல்லாம் அப்பார்ப்பனனிடமே கொடுத்து விட்டு, பிறகு தன்னுடைய தேவைகளுக்கெல்லாம், பணிகளுக்கெல்லாம் அவனுடைய ஆணையை எதிர் நோக்குகின்ற பரிதாப நிலையும் நாயரின் நெஞ்சில் சிலிர்ப்புகளை உண்டாக்கின. இதன் பயனாய் அவர் நடத்திய கிருமி நாசினி (Anti Septic) இதழ், சமுதாயத்தின் கிருமி நாசினியாகவும் பணியாற்றத் தொடங்கிற்று.
எனவே, ஜாதி ஒழிப்புபற்றிய கருத்துக்கள், நாயரிடம் அவர் கேரளத்தில் வாழ்ந்த காலத்திலும், இதழ் நடத்திய காலத்திலும் வேரூன்றி வளரத் தொடங்கியிருந்தன என்பதை அறிய முடிகிறது. ஆனால் தொடக்கக் காலத்தில் இப்பணியில் டாக்டர் நாயர் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதும் உண்மையே. நீதிக் கட்சியில் இணைந்த பிறகு ஜாதி ஒழிப்பில் அவர் காட்டும் வெளிப்பாடுகள்- அதற்குமுன் பெருமளவில் வெளிப்படாமையே இதற்குரிய அடிப்படையாக நாம் கொள்ளலாம். எவ்வகையிலோ ஜாதி ஒழிப்பு என்பது நாயருக்கு புதிதாகப் புகட்டப்பட்ட செய்தி அல்ல என்பதும் - அவரிடம் அக்கருத்து புயல்வேகம் கொண்டது - நீதிக்கட்சியின் விளைவால்தான் என்பதும் எண்ணத்தக்கது. இத்தகைய ஒரு வாய்ப்பை அவருக்குத் தந்த தமிழகத்தின் நிலையைச் சற்றுப் பார்ப்போம்.
தமிழகம் என்பது என்ன? யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் வாழ்ந்த தமிழகம் ஜாதிகள் இல்லையடி பாப்பா எனப் பிறந்த குழந்தைக்குப் புத்தி புகட்டும் நிலைக்குள்ளானது. கனகவிசயரின் முடித்தலை நெறித்து கல்சுமக்க வைத்த தமிழினம், பல்வேறு ஜாதித்துண்டுகளாய்ச் சிதறிப்போனது. இதற்குரிய காரணங்களையும், இதன் விளைவுகளையும் திரு.கே.பரமசிவம் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலே மக்கள் தோன்றிய இந்த பூபாகத்திலே, உலகத்தின் மற்ற பகுதிகளிலே மலையிலும், நாட்டிலும், மனிதன் சுற்றித் திரிந்தபோது, இங்கிருந்த தமிழன் பாலாடையொத்த மேலாடை அணிந்து புரவி மீதமர்ந்து, மாட மாளிகை, கூட கோபுரம் எழுந்திருந்த ஊர்கள் நடுவே அழகிய பாதைகளிலே உலவினான். தமிழ் மன்னன் நால்வகைச் சேனை புடைசூழ பவனி வந்து கொண்டிருந்தான். அவனுடைய நாகரிகம், இன்றைக்கிருக்கும் நிலைக்கு ஈடாக வளர்ந்தது. அவனுடைய கலை, இலக்கியம் யாவும் இன்றும் காண்போர் வியக்கும் அளவு உயர்ந்து நின்றது. அவனுக்கு நீர்ப்பாசனம் தெரிந்திருந்தது, சாலைகள் அமைத்தான், ஏரிகள் வெட்டினான், அரண்மனைகள் கட்டினான், வந்தவர்களை ஏற்று உபசரிக்கவும் கற்றுக்கொண்டிருந்தான். வந்தவர்கள் நல்லவர்களா? நயவஞ்சகம் கொண்டவர்களா? என்று தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லாமல் மிதந்து வாழ்ந்தான். இதன் பலன் இந்தக் கண்டத்தில் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆடு மாடுகளை ஓட்டிவந்த ஆரிய இன மக்களிடம், தமிழன் தன்னை ஒப்படைத்து விட்டான். தன்மானமிழந்தான். அறிவுக்கு முரணான இழிவுதரும் மதச் சடங்குகளுக்கு ஆளானான்...........முதலியானான், கோமுட்டியானான், வாணியனானான், நாயுடுவானான், இன்ன பிற நூற்றுக்கணக்கான ஜாதிக் கட்டுப்பாட்டுக்கு ஆட்பட்டான். அவனுடைய இயற்கையான வாழ்க்கைமுறை பறிபோயிற்று. செயற்கை வேறுபாடு கருதும் வாழ்க்கை தொடங்கியது. இந்த மாற்றத்தினால் அவன் அடைந்த இழப்பு ஏராளம். ஒரு தலைமுறை அல்ல - தலைமுறை தலைமுறையாக, அவன் அடிமை மனப்பான்மைக்கு ஆளாகிவிட்டான்.
ஆடுமாடுகளை ஓட்டிவந்த ஆரியர்களோ, நாட்டிலே உயர்வானதொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். ஊர் மக்களை இரண்டல்ல, இருநூறு ஜாதிகளாகப் பிரித்தால், ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு ஏற்படும் கொண்டாட்டத்தைவிட பன் மடங்கு பயன்கொண்டனர். நாட்டிலே இருந்த பழங்குடி மக்களின் அறிவுக் கண்களை மறைத்து விட்ட காரணத்தால், பார்ப்பனன் தெய்வப் பிறவியானான் அவர்களுக்கு, பார்ப்பன சேவை தெய்வ சேவையாயிற்று! ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் தெய்வமா? மனிதனுக்கு மனிதன் பேதா பேதமா? ஒரு மனிதனை விட மற்றொருவன் பிறப்பிலே உயர்ந்தவனா? எல்லோரும் கடவுளின் மக்களானால் பிறப்பிலேயே பேதம் காட்டக்காரணம் என்ன? அந்தக் கேள்விகளைக் கேட்க இந்நாட்டு மக்களுக்குத் துணிவு வருவதற்கு நீண்ட காலம் ஆயிற்று ..... எவ்வாறோ இந்நாட்டிற்கு வெள்ளைக்காரன் வந்தான். நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். போக்குவரத்து வசதிகள் பெருகின. கல்விக் கூடங்கள் பெருகின. படித்தவனுக்கு வேலை கிடைக்கும் என்ற நிலையும், பதவிகள் கிடைத்தால் நாட்டு மக்களை ஆளும் பொறுப்பும் அதனால் பலனும் அடையலாம் என்ற சூழ்நிலையும் பிறந்தது. சமூகத்திலே மதத்தை அடிப்படையாக வைத்து அரசோச்சி வந்த பார்ப்பனர், ஆங்கிலேயன் நுழைவுக்குப் பின் ஆங்கிலப் படிப்பிற்கும், அதனால் ஏற்படும் பதவிகளுக்கும் உள்ள மதிப்பை அப்பொழுதே உணர்ந்து கொண்டனர். ஆகவேதான் வெள்ளைக்காரன் வந்த அய்ம்பது ஆண்டுக்குள் நாடு முழுமையும் இந்தியனுக்கு ஒதுக்கப்பட்ட அத்தனை பதவியிலும் அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி ஆகியோரே அமர்ந்துவிட்டிருந்தனர்.
நமது மாநிலத்தைப் பொறுத்தவரை 1912 ஆம் ஆண்டில் இருந்த நிலைமை இதுவாகும். அன்றைய சென்னை மாநில சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தவர்கள் பட்டியல் இது:
ஸ்தல ஸ்தாபனப் பிரதிநிதிகள்
(உள்ளாட்சித்துறையிலிருந்து வந்தவர்கள்)
1.      தென் ஆற்காடு - செங்கற்பட்டு தொகுதி
          வழக்கறிஞர்  R.சீனிவாச அய்யங்கார்
2.      தஞ்சை - திருச்சி தொகுதி -
          திவான் பகதூர் V.K. இராமானுஜ ஆச்சாரியார்.
3.      மதுரை - இராமநாதபுரம் தொகுதி
          K. இராமையங்கார்
4.      கோவை - நீலகிரி தொகுதி
          C. வெங்கட்ட ரமணய்யங்கார்
5.      சேலம் - வட ஆற்காடு தொகுதி
          B.V. நரசிம்ம அய்யர்.
6.      சென்னை நகர் C.P. இராமசாமி அய்யர்.
டெல்லி, மத்திய சட்டசபையில் இடம் பெற்றவர்கள்
செங்கற்பட்டு மாவட்டம் M.K.ஆச்சாரியார்.
சென்னை - திவான் பகதூர் T.ரங்காச்சாரி.
உயர்நீதி மன்றத்தில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள்
S.சுப்பிரமணிய அய்யர்
V.கிருஷ்ணசாமி அய்யர்
T.V. சேஷகிரி அய்யர்
P.R. சுந்தரம் அய்யர்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலே நாட்டில் இருந்த வழக்கறிஞர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் நூற்றுக்கு தொண்ணூறுபேர் பார்ப்பனர்களே. திராவிட இனமக்கள், ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வயற்புறத்திலும், மலைத் தோட்டங்களிலும், தொழிற் கூடங்களிலும், பரங்கியர் வீட்டுப் பணியாட்களாகவும் ஏவல் செய்யும் குடிமக்களாய் வாழ்ந்து வந்தனர். பரம்பரை ஜாதிப் பெருமையால் சொகுசாய் வாழ்ந்து வந்த பார்ப்பன சமூகம், ஆங்கிலேயன் ஆட்சியில் ஆங்கிலக் கல்வியைத் தேடிக் கொண்டு அரசுபீடத்தில் அமர்ந்தது. அந்த நாட்களில் முதல் உலகப் பெரும்போர் ஆரம்பித்தது. அய்ரோப்பியக் கண்டத்தில் பெரும் எதிரிப் படையைச் சந்திக்க நேரிட்ட ஆங்கிலேயன், இந்தியரின் ஒத்துழைப்பை நாடினான் - தனது நாட்டைக் காக்க. அந்த நிலையைப் பயன்படுத்திப் பார்ப்பனச் சமூகம் இரண்டாகப் பிரிந்து இந்திய அரசியல் வானிலே விளையாட ஆரம்பித்தது. ஒரு பகுதி வெள்ளைக் காரனோடு சேர்ந்து ஆட்சி பீடத்தை இறுகப் பிடித்துக் கொண்டது. மற்றொரு பகுதி அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் தொடங்கிய சுயஆட்சி இயக்கத்தில் இடம் பிடித்துக் கொண்டது.
மேலும், தமிழகத்தில் 1899 முதல் 1906 வரை ஆங்கில ஆதிக்க காலத்தில் ஆளுநராக இருந்த (Governor ) லார்ட் ஆம்ட்இல்ஸ் (Lord Ampthills) என்பவர் தான் கண்ட தமிழகத்தை மார்னிங்போஸ்ட் (Morning Post ) என்ற இதழில் படம் பிடித்துக் காட்டியிருப்பது மிகுந்த பயனுடையது.

Nobody who has not lived In India can possibly understand the unique institution which is called ‘GASTE’ and only a few of the Europeans who have lived in India have any real comprehension of the system. For practical purposes it is sufficient to know.
i) That Caste and Hinduism are inseperable; infact, that the Caste idea is the soul as well as the body of Hinduism.
ii) That no Indian escape from that influence of the Caste idea.
iii) That the existence of the Caste spirit obsolutely precludes the establishment of the democratic ideal, which is that of equality of all man before the law.
இதன் தமிழாக்கம் வருமாறு:
இந்தியாவில் வாழ்ந்த அனுபவமில்லாத எவரும் அங்கு  நிலவும், தனிப்பட்ட ஜாதி என்னும் அமைப்பைப்பற்றிப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்தியாவில் வாழ்ந்த அய்ரோப்பியர்களில் ஒரு சிலரால் மட்டுமே இந்த ஜாதி அமைப்பின் உட்பொருளை அறிந்து கொள்ளமுடியும். இருப்பினும் நடைமுறைக்காக இவற்றைத் தெரிந்து கொண்டாலே போதுமானது:
1) இந்நாட்டில் நிலவும் ஜாதிகளும், இந்து மதமும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாதது. இதில் உண்மையென்னவெனில் ஜாதீயக்கருத்தின் உயிராகவும், உடலாகவும் இருப்பது இந்து மதமே.
2) இந்த ஜாதீயக் கோட்பாட்டின் தாக்குரவிலிருந்து இந்தியர் ஒருவர் கூட தப்பிக்க முடியாது.
3) இப்போதும் நடைமுறையில் உள்ள இந்த ஜாதிய அமைப்பு முறை - சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற மக்களாட்சித் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பெருந் தடையாக உள்ளது.
இத்தகைய அமைப்பு முறையை - ஏற்பாட்டை உருவாக்கித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திவந்த பார்ப்பன இனத்தை - ஆபி. ஜே. துபாய்ஸ் (Abbe J. A. Dubois ) என்ற ஆங்கிலேயர் தன்னுடைய எழுதுகோல் நுனியால் வரைந்த படம் இது:
பார்ப்பனர் தங்களைப்பற்றி வைத்திருந்த உயர்வு மனப்பான்மை நீக்க முடியாதது - மிக அழுத்தமானது. இவர்கள் ஏழையோ, பணம் படைத்தவரோ, வாய்ப்புள்ளவரோ, வாய்ப்பற்றவரோ - இதைப்பற்றிக் கவலையின்றி எல்லோரும் பின்பற்றிய கொள்கை ஒன்றுதான். அக்கொள்கையின்படி உலகில் படைக்கப்பட்ட உயிர்களிலேயே தாங்கள் மட்டுமே புனிதமானவர், ஒழுக்கமானவர் என்றும், மற்ற எவ்வுயிரும் அவர்களுக்குக் கீழானவர்களே என்றும், தங்களுடைய பழக்கவழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் மேலானது உலகில் எதுவுமே இல்லை என்றும் எண்ணி நடந்தனர்.
பார்ப்பனர்களிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழகத்தில் இச்சமுதாயச் சூழலில் டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி.தியாகராயர் ஆகியோர் ஆற்றி வந்த பணிகளைக் காண்போம்.
வெள்ளையர் அளித்த இடங்களிலெல்லாம் தன் முனைப்புள்ள பார்ப்பனர்கள் தம்முடைய ஆதிக்கத்தை அதிகமாக்கினர். அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் வருவாய்த்துறை எனப் பல துறைகளிலும் அவர்களே பதவிகளையும், பதவி உயர்வுகளையும் பெற்றுப் பகட்டாக வாழ்ந்தனர். இதனால் பார்ப்பனரல்லாதார் கடைநிலை ஊழியர்களாகவும், காரோட்டிகளாகவும், எவ்வளவு முயன்றாலும் எழுத்தர் என்ற அளவிற்கு மட்டுமே பதவி நியமனமும், பதவி உயர்வும் பெற முடிந்தது. இக்கொடுமை இப்பார்ப்பனீய ஏகாதிபத்தியம் 1912 களில் அதன் உச்சிக்கே சென்றது எனலாம். இதனால் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை ரெவின்யூபோர்டு (வருவாய்த்துறை) எழுத்தர் சிலரும், மற்றும் சில அலுவலக எழுத்தர்களும் தங்கள் மேலதிகாரிகளான பார்ப்பனர்களின் ஜாதிவெறியைக் கண்டு, இன உணர்வு பெற்று, பார்ப்பனர் அல்லாதாருக்கென சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) என்ற அமைப்பை 1909இல் தொடங்கித் தொண்டு புரிந்தனர். இவ்வமைப்பில் இருந்தவர்களில் சரவணப் பிள்ளை (பிற்காலத் தஞ்சை துணை ஆட்சியாளர்) ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார் (பொறியியல் துறை) எஸ். நாராயணசாமி நாயுடு (வருவாய்த் துறை) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுக்கு வழிகாட்டவும், எதிர்த்துநின்று போராடவும் தன்னலமற்ற மனிதர் ஒருவர் தேவைப்பட்டார்; தேடினர். இவர்களுக்குக் கிடைத்தவர்தான் டாக்டர் சி.நடேசனார் என்கிறார் திரு.வே.ஆனைமுத்து. இவர் திருவல்லிக்கேணியில் வாழ்ந்து கொண்டு மருத்துவத் துறையில் எல். எம். எஸ். பட்டம் பெற்று, ஏழைகளுக்கும் சேரி மக்களுக்கும் மனம் கோணாமல் - தன்னலம் கருதாமல் பாடுபட்டுவந்த உத்தமர். இவர் மனத்திலும் அறிவார்ந்த அனுபவத்தாலும் பார்ப்பனீயக் கொடுமைகள் பற்றிய - ஜாதி ஒழிப்பு பற்றிய கருத்துக்கள் வேரூன்றி இருந்தன. சென்னை அய்க்கிய சங்க அமைப்பு டாக்டர் சி.நடேசனாரைச் சந்தித்து, அவருடைய ஆதரவையும் பெற்று, அவரையே அச்சங்கத்தின் செயலாளராக ஆக்கியது.
டாக்டர் சி.நடேசனார், அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனரல்லாதாரின் வீழ்ச்சியையும், இதற்குப் பார்ப்பன ஆதிக்கமே காரணம் என்பதையும் உணர்ந்தார். அன்றைக்கிருந்த அரசும் பார்ப்பனர்களையே மதித்து, அவர்களுக்குப் பதவிகளை, அள்ளி அள்ளித் தந்தது. இதற்கு முக்கிய காரணம் பார்ப்பனர்களின் கல்வி மேம்பாடும், பார்ப்பனரல்லாதார் இன்னமும் கல்லாதவராய்க் காலம் கடத்துவதுமே என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர் சி.நடேசனார். அதேசமயத்தில் பார்ப்பனரல்லாதாரின் வீழ்ச்சியைத் தடுக்கவும், அவர்களை அனைத்துத்துறைகளிலும் முன்னேறச் செய்து பார்ப்பனர் கொட்டத்தை அடக்கவும் இது தகுந்த காலம் என்பதைத் துல்லியமாகக் கணித்தறிந்த நடேசனார், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கத்தை மாணவர் இயக்கமாக மாற்ற முற்பட்டார். இதைச் செம்மையாகச் செய்து முடிப்பதற்காக நிதி திரட்டி திராவிடர் இல்லம் என்ற உணவுவிடுதி ஒன்றையும் நிறுவினார் சென்னை அய்க்கிய சங்கம், திராவிடர் இல்லம் (Dravidian Home )இவை இரண்டின் தோற்றம் பற்றிய துல்லியமான செய்திகள் கிடைக்கவில்லை. (இரண்டும் ஒரே காலத்தில் தோற்று விக்கப்பட்டதா? முன் பின்னாகத் தோற்றுவிக்கப்பட்டதா? இச்சங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு செயல்பாட்டைக் கூறவந்த திரு.எஸ்.ஜி. மணவாள இராமானுஜம்.
சென்னை அய்க்கிய சங்கம், பார்ப்பனரல்லாத மாணவர்களின் புகலிடமாகவும், பயிற்சிப் பாசறையாகவும், அவர்களைப் பாராட்டி முன்னேறத்தூண்டும் மய்யமாகவும் விளங்கியது. இச்சங்கத்தில் நேருவின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் என்கிற அளவிற்கு உயர்த்தப்பட்ட சர்.ஆர்.கே. சண்முகம்செட்டியார் போன்ற புதிய பட்டதாரிகளை வரவேற்றுப் பாராட்டி ஊக்கமூட்ட ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்திற்குத் திவான் பகதூர் பி.கேசவப்பிள்ளை தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் தலைமுறைத் தலைவர்களான சர்.பிட்டி.தியாகராய செட்டியார், பானகல் அரசர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வரிய பார்ப்பனரல்லாதாரின் ஒற்றுமைக்கு அளப்பரிய பணிகளாற்றி வந்த டாக்டர் நடேசனாரை சென்னை இளைஞர்களையும் மாணவர்களையும் ஒன்று கூட்டி எழுச்சியூட்டத்தக்க வகையில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு சிலர் கேட்டுக்கொண்டனர். இக்கோரிக்கையின்படி டாக்டர் சி.நடேசனார் ஏற்பாடு செய்த கூட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த வழக்கறிஞர் எஸ்.ஜி.சடகோப முதலியாரின்  நீலா விலாஸ் இல்லத்தின் சுற்றுக்குள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டாக்டர் டி.எம்.நாயர் கலந்து கொண்டார் என்பதும், இளைஞர்களாகிய நீங்கள் - பார்ப்பனர்களால் அநீதி இழைக்கப்பட்ட நீங்கள் - இப்போது வீறுகொண்டு எழுந்து இந்த இயக்கத்தையும், உங்களையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள். இப்பணியில் தவறுவீர்களேயானால் உங்கள் எதிர்காலம் இருளடைந்து போகும் என முழக்கமிட்டதும் குறிப்பிடத்தக்கது. இக்குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி 1916களில் நடந்தது. இதற்கிடையில் சென்னை அய்க்கிய சங்கம் (Madras Dravidian Association ) என மாற்றப் பட்டது. இதுவே திராவிடர் இயக்கமாகவும் கருதப்பட்டது.
திரு.வே. ஆனைமுத்து, திரு.எஸ்.ஜி. மணவாள இராமானுஜம் ஆகியோரின் குறிப்புகளில் இருந்து சென்னை அய்க்கிய சங்கம் என்ற முதல் அமைப்பே டாக்டர் சி.நடேசனாரிடம் ஒப்படைக்கப்பட்டு, திராவிடர் இல்லம் என்ற துணை அமைப்புடன் விரிவாகி, பிறகு சென்னை திராவிடர் சங்கம் என மாற்றமடைந்தது என்பதை அறிய முடிகிறது.
இச்சென்னை திராவிடர் சங்கம் பற்றி திரு.வி.. கூறியதாக திரு.கோ.குமாரசாமி குறிப்பிடும் கருத்துக்கள் மிகுந்த பயன் தருவனவாக உள்ளன. அவை:
இச்சங்கத்தின் பிறப்பைப் பற்றி அதிக அளவில் தெரிந்து கொள்வதற்கு இயலவில்லை. சங்கம் தோன்றிய நாள், மாதம், ஆண்டு முதலியவைகள் சரியாகத் தெரியவில்லை. 1912 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நினைவு இருப்பதாக திரு.வி.. அவர்கள் என்னிடம் கூறினார்கள். 1912 ஆம் ஆண்டு இச்சங்கத்தில் தாம் பேசியதாகவும் அப்போதுதான் நடேச முதலியாருக்கும் தமக்கும் நட்பு உண்டாகிய தாகவும் தம் வாழ்க்கைக் குறிப்பு நூலில் குறித்துள்ளார்கள். இச்சங்கத்தைப்பற்றி திரு.வி.. மேலும் கூறியதினின்றும், சங்கத்தின் சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடைபெறுமென்றும், மாவீரர் மா.சிங்காரவேலர் பொதுவுடைமை, விஞ்ஞானம் போன்ற பொருள்கள்பற்றியும், புரபசர் லட்சுமி நரசு, பவுத்தமதம், ஜாதிமதக் கேடுகள் போன்ற பொருள்கள் பற்றியும், எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை ஜோதிடம் - கணிதம் முதலிய பொருள்கள் பற்றியும், திரு.வி.. தமிழ் இலக்கியம் பற்றியும், சொற்பொழிவாற்றுவார்கள் என்றும், இச்சொற்பொழிவுகளை அறிஞர் குழாம் கேட்டு மகிழ்ச்சியுறுமென்றும் தெரிய வருகிறது. திருவாளர் திவான் பகதூர் தாதுலிங்க முதலியார் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களும் திராவிடர் சங்கம் நடேசனார் வீட்டில்தான் அமைக்கப்பட்டு நடந்து வந்ததென்றும், வீட்டிற்கு எதிரில் இருந்த ஒரு தோட்டத்தில்தான் கூட்டங்கள் கூட்டப்படுமென்றும், அக்கூட்டங்களில் அறிஞர்கள் பலர் பங்கெடுத்துக் கொள்வரென்றும், அரசியல் விஷயங்கள் முதல் பல விஷயங்கள் பேசப்படுமென்றும் வெகு நேரம் இன்ப ஆரவாரம் இருக்குமென்றும் கூறினார்கள். ஆகவே நடேசனார் கண்ட திராவிடர் சங்கமானது, ஆந்திர மகாஜன சபா, சென்னை மகாஜனசபா போன்ற வழிகளில் கட்சி சார்பற்ற பொதுமக்களின் கழகமாக நடத்தப்பட்டு வந்தது என நினைக்க ஏதுவேற்படுகிறது.
இங்கு திராவிடர் சங்கம், திராவிடர் இல்லம் இவற்றின் தோற்றம் பற்றிய முக்கியச் செய்தி ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். திரு.கோ.குமாரசாமி அவர்கள் திராவிடப் பெருந்தகை தியாகராயர், திராவிடத்தலைவர் டாக்டர் சி.நடேசனார் வாழ்வும் தொண்டும் ஆகிய இரு நூல்களிலுமே இவற்றின்  தொடக்கம் பற்றிய செய்தி துல்லியமாகக் கிடைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் அண்மையில் பேராசிரியர் பி.ராஜாராமன் டாக்டர் பட்டத்திற்கு நிகழ்த்திய நீதிக்கட்சி பற்றிய ஆய்வில் இவை தோன்றிய காலத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். அதன் சுருக்கம்:
டாக்டர் சி.நடேசனாரால் நடத்தப்பட்டுவந்த சென்னை அய்க்கிய சங்கம், விரைவாக சென்னையில் வாழ்ந்த முக்கியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தியன் பேட்ரியட் ((Indian Patriot) இதழின் ஆசிரியராக இருந்த சி.கருணாகரமேனன், மற்றும் பானகல் அரசர் பி.இராமராய நிங்கர் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்... இச்சங்கம் சென்னை திராவிடர் என்ற புதிய பெயருடன் 1912 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் (10-11-1912) இயங்கத் தொடங்கியது.... 1914ஆம் ஆண்டில் திராவிடர் இல்லம் இயங்கத் தொடங்கியது. என அறுதியிட்டுக் கூறி இதற்குரிய சான்றுகளையும் தம்முடைய நூலில் தந்துள்ளார் திரு.பி.ராஜாராமன். எனவே இவற்றின் தோற்றம் பற்றிய காலத் தெளிவு நமக்குக் கிட்டிவிட்டதெனலாம். இச்சங்கத்தின் கூட்டங்களில் பலரும் சொற்பொழிவாற்றிய செய்தியை மேலே கண்டோம். இதில் வியப்புக்குரிய ஒரு செய்தி என்னவெனில், பிற்காலத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் முழுப்பகைவராக விளங்கிய அன்னிபெசன்ட் அம்மையாரும் இச்சங்கத்தில் 30-10-1914இல் முன்னேற்றத்தின் வழிமுறைகள் (The Conditions of Progress ) என்னும் பொருளில் சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார் என்பதுதான்.
இவ்வாறு அறிஞர் அழைத்துச் சொற்பொழிவு நிகழ்த்தியும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஊக்கமூட்டியும் வந்த திராவிடர் சங்கம், 1915இல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பணியைச் செய்தது. இப்பணியின் விளைவால் தூங்கிக் கிடந்த திராவிடர் புதிய விழிப்புணர்ச்சி பெற்றனர் - தன்னிலை உணர்ந்தனர் - தகுந்த வழி தேடினர் என்றுதான் கூறவேண்டும். இப்பணியைப்பற்றி .எஃப்.இர்ஷிக் தம்முடைய Politics and Social Conflict in South Indiaஎன்ற நூலில் தரும் செய்திகளையும், டாக்டர் பி.இராஜாராமன் தமது ஆய்வுரையில் கண்டறிந்துரைத்த கருத்துக்களையும் இங்கே சுருங்கத் தருகின்றேன்:
திராவிடர் சங்கத்தின் பணிகளில் மிகவும் பாராட்டத் தக்க பணி 1915இல் அச்சங்கம் இரண்டு நூல்களை வெளியிட்டமைதான். இந்நூல்கள் பல பார்ப்பனரல்லாத மக்களை ஈர்த்து புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. திரு.சி.சங்கரன் நாயர் என்பவர் எழுதிய Dravidian worthies திராவிடர் சிறப்பு, என்ற நூலும் Non - Brahmin letters (பார்ப்பனரல்லாதார் கடிதங்கள்) என்ற நூலும் திராவிடர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டன. இவை சி.கருணாகரமேனன் வெளியீடுகளாக வந்திருக்கலாம் எனக் கருதுகிறார் .எஃப். இர்ஷிக். பார்ப்பனரல்லாதார் கடிதங்கள் பார்ப்பனரல்லாத ரெட்டியார், நாயுடு, முதலியார் போன்ற பல வகுப்பாரை விளித்துக் கருத்துக்களைக் கூறும் முறையில் அமைந்திருந்தன. இக்கடிதங்களில் பார்ப்பனரல்லாதார் படும் இன்னல்கள் மட்டுமின்றி, வளர்ந்துவரும் பார்ப்பனரல்லாத இளைஞர்கள் சமுதாயத்தில் உரிய இடத்தைப்பெற உறுதியாகப் போராடவேண்டும் என்பதையும், பார்ப்பனரல்லாதாருக்குள்ளே நிலவும் போட்டி, பொறாமைகளை ஒழிக்கவேண்டும் எனவும் அறிவு புகட்டின.
புதிய ஆங்கிலக் கல்வியைக் கற்று பார்ப்பனர்களுக்கு மேலாக வளரவேண்டிய திராவிடர், பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பதைக் கண்டித்தன. போர்ட், செயின்ட், ஜார்ஜ்ஜின் அரசாங்கத்தில் மிக உயரிய பதவிகளுக்குத் திராவிட இனத்தவர் வராமை குறித்து எள்ளி நகையாடின. இறுதியில் இத்துணை கூறியும் முன்னேற முயலாமல் சோம்பிக் கிடப்பவர் தாழ்வு மனப்பான்மையால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் குற்றவாளிகள் எனக் கடிந்துரைத்தன. இவ்வாறு இக்கடிதங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு புதிய அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின; பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீர உணர்வூட்டின. இந்த இரு வெளியீடுகளையும் தகுந்த காலத்தில் வெளியிட்டதன் விளைவாக பார்ப்பனரல்லாதார் அனைவரும் தங்களை ஒரு குடையின் கீழ் இணையவும் தங்களுக்கென ஓர் அமைப்பு தேவை என்ற முடிவுக்கும் வந்தனர்.
எனவே இத்தகு சீரிய பணிகளாற்றிக் கொண்டிருந்த - சுயமரியாதை உணர்வூட்டி வந்த திராவிடர் சங்கத்தில் டாக்டர் டி.எம். நாயர் 1916இல் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார் என்பதை முன்பே அறிந்தோம்.
திராவிடர் சங்கம் 1915இல் வெளியிட்ட பார்ப்பனரல்லாதார் கடிதங்களை டாக்டர் நாயரும் கண்டிருக்கக்கூடும். இருப்பினும் அவருடைய சட்டமன்ற மேலவை உறுப்பினர் பணிக்காலத்தில்தான் பார்ப்பனீயத்தின் முழு உருவத்தையும் டாக்டர் நாயரால் அறிந்து கொள்ள முடிந்தது.
மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தும், வெறுப்புற்று பதவியைத் துறந்தும் இருந்த நாயர், தியாகராயருடன் கருத்து மாறுபாடு கொண்டிருந்த வரலாற்றையும் நாம் கண்டோம். தியாகராயருடன் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாரே தவிர, முற்றிலும் பேச்சு வார்த்தையற்றவராக டாக்டர் நாயர் இருந்திருக்க முடியாது என்பதைப் பிற்கால நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.
இந்நூலின் முன்பக்கங்களில் குறிப்பிட்டுள்ள பாரதியின் குறிப்புக்களின் 1906களில் மாநகராட்சியின் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திற்குச் செல்ல முடியாத நாயர், 1912களில் அதே தேர்தலில் வென்று சட்டமன்ற மேலவை உறுப்பினரானார் (ஆநஅநெச).  இம்மன்றத்தில் தனக்கே உரிய சிறப்பு முத்திரைகளைப் பதித்தவர் டாக்டர் நயார்.
சட்டமன்ற மேலவையில் மருத்துவ உதவி, மக்கள் நலவாழ்வு, கல்வி, தொழில், தொழிலாளர் முன்னேற்றம், தன்னாட்சி அமைப்பு - போன்ற வாதங்களில் டாக்டர் நாயரின் கருத்துக்கள் மறுமலர்ச்சியை உண்டாக்கின.
டாக்டர் நாயர் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த இக்காலத்தில்தான் சென்னை மருத்துவப் பதிவு மசோதா (Madras Medical Registration Act)) அவையில் வாதத்திற்கு வந்தது. கடுமையான எதிர்ப்புகளையும், வன்மையான வாக்குவாதங்களையும் நாயர் தன் நாவன்மையால் முறியடித்தார். இந்த மசோதா நாயரின் பெரு முயற்சியால்தான் சட்டமன்ற ஒப்புதலைப் பெற்று, 1914இல் சட்டமாக்கப்பட்டது.
இம்மருத்துவச் சட்டம்தான் மூடத்தனமான மருத்துவ முறைகளைத் தடுத்தது. சித்த, ஆங்கில மருத்துவமுறைகளைத் தெளிவாக வரையறுத்தது. இவை மட்டுமின்றி பட்டம்பெற்ற மருத்துவர்களின் தொழில் விதிகளை ஒழுங்குப்படுத்தி, அவர்களின் தரத்தை உயர்த்தியது. மருத்துவத்துறையின் வருவாய் பெருகச் செய்து, தகுதி, திறமைமிக்கவர்களால் இத்துறையின் இயக்கத்தைச் சீராக்கியது. குறிப்பாக சென்னைப் பொதுமருத்துவமனையின் சீரான இயக்கத்திற்கு இச்சட்டம் வழி வகுத்தது.

நூல் - டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்


ஆசிரியர் - கவிஞர் கூ.வ.எழிலரசு

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!