திராவிடத் தந்தை டாக்டர் சி.நடேசனார் - பகுதி - 1


வாழ்நாள் முழுவதும்உயர்ந்த இலட்சியத்துடன்வாழ்ந்தவர்கள்தன்னலம் பற்றிப் பெரிதும் சிந்திக்காதவர்கள் என்பதை உலக வரலாறு புகட்டும் உண்மையாகும்.

தன்னைப் பற்றியோதன் குடும்பத்தைப் பற்றியோ கடுகளவும் சிந்திக்காதவர்கள்தான் உலகைத் திருத்திய உத்தமர்களாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.

உலகம் போற்றும் உத்தமர்கள் பிறந்ததே ஊருக்கு உழைக்கத்தான்உலகத்தின் முன்னேற்றத்திற்காகத்தான்எல்லோரும் இன்புற்று வாழத்தான் என்பதை நமக்கு உலக வரலாறு புகட்டுகிறது.

ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டும்ஒடுக்கப்பட்டும்சுரண்டப்பட்டும்தாழ்த்தப்பட்டும்பின்தள்ளப்பட்டும்பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டும்ஏளனத்திற்கும்அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டு அவதியுற்ற மக்களைத் தலைநிமிரச் செய்துபுது வாழ்வைப் பூரிப்புடன் நடத்திட வழிகாட்டிய உத்தமர்கள் எவருமே நிம்மதியுடனோதொல்லையின்றியோ வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

அப்படிப்பட்டவர்கள் துன்பத்தையே தொடர்ந்து வாழ்க்கையில் அனுபவித் துள்ளனர்!

அவர்கள் வாழத் தெரியாதவர்களும் அல்லர்இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வைப் பாழாக்கிக் கொண்டவர்கள் என்றுதான் கூறவேண்டும்எப்படியும் வாழலாம் என்று அவர்கள் நினைத்திருந்தால்அவர்கள் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்ந்திருக்க முடியும்.

உலகம் இயங்குவதற்கு அடிப்படை பணம்தான் என்று கண்டறிந்த உடனேகாரல் மார்க்ஸ் தன்னலம் கொண்டு வாழ்ந்திருந்தால்இன்று உலக நாடுகளில் ஒன்றுகூட இல்லாமைகல்லாமைஏழ்மை  அகன்ற சமதர்மப் பூங்காவாக மலர்ந்திருக்கவே முடியாது.

கொடுங்கோல் புரிந்த மன்னர்கள் மக்களைக் கொடுமைப்படுத்தினால் நமக்கென்ன - மதகுருக்கள் மக்களைச் சுரண்டினால் நமக்கென்ன என்று லெனின் நினைத்திருந்தால்சோவியத் ருசியா ஒரு பொது உடைமைப் பூங்காவாக மலர்ந்திருக்க முடியுமா?

நல்லதையே நினைத்துநல்லதையே பேசிநல்லதோர் சமுதாயம் உருவாகப் பாடுபட்ட சாக்ரடீஸ் கதி என்னவிஷக்கோப்பை!

எது கடவுள்யார் கடவுள்அவனால் மக்கள் அடையும் நன்மை என்னஇதையெல்லாம் துணிந்து கேட்ட புரூனோ கதி என்னதீயில் கருகிச் சாம்பலானான்!
ரூசோவால்டேர்இங்கர்சால் இப்படி எத்தனையோ பேர்குடும்பத்தை மறந்து மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்று பாடுபட்டனர்அவர்கள் தங்களைப்பற்றியோதங்கள் குடும்பத்தைப்பற்றியோ அக்கறை கொண்டிருந்தால்நன்றாக வாழ்ந்திருக்க முடியும்.

பிறருக்காகவே வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டுதொல்லைகளையும்துன்பத்தையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் புரிந்த தியாகத்தின் பயனாகத் தானே இன்று உலகம் ஓரளவிற்கு முன்னேற்றப் பாதையில் நடைபோட முடிகிறது.

அந்தப் பட்டியலில் இடம் பெறத்தக்க தியாகிகளை நம் தாயகம் - தமிழ்நாடு பெற்றுள்ளது என்பதை நம்மவர் பலர் அறியவில்லைஅது அவர்கள் குற்றமல்லசுய விளம்பரத்தை அவர்கள் நாடவில்லைசுயசரிதை அவர்கள் படைக்கவும் இல்லைஅதற்கான நேரமும் அவசியமும் ஏற்படவில்லை.

என் கடன் பணி செய்வதே என்று கடமையை முடித்த உத்தமர்கள் அவர்கள்அவர்கள் புரிந்த தியாகத்தின் விளைவாக இன்று நம் சமுதாயம்படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகிறது என்பதை நம்மில் ஒரு சிலர் கண்டறிய முடிகிறது.
வாழ்ந்த தமிழினம் வீழ்த்தப்பட்டு விட்டதுஉலகமே வியக்கத்தக்க வரலாறு படைத்த தமிழன் தன் தாய் நாட்டிலேயே அடிமையாக்கப்பட்டான்வாழ்வு இழந்தான்உரிமைகளை இழந்தான்தன் கலாசாரத்தைப் பறிகொடுத்தான்வந்தேறிகளின் நாகரிகத்திற்கு அடிமையானான்தன் தாய்மொழி அழிவதை தானே கண்டும் வாளாயிருந்து விட்டான்.

சுரண்டப்பட்டும்வஞ்சிக்கப்பட்டும்புறக்கணிக்கப்பட்டும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும்நாதியற்றும்நலிந்தும்பின்தள்ளப்பட்டும்அக்கிரமக்காரர்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்டும்மதத்தின் பெயரால் மானம்மரியாதையை இழந்தும்ஏதும் செய்ய முடியாத நிலையில் பல நூற்றாண்டுகள் துடித்தும்துவண்டும்தவித்தும்துன்பமும்துயரமுமே தன் தலை எழுத்து என்று அல்லலுக்கு ஆளாக்கப்பட்ட தமிழர் சமுதாயம்மீண்டும் புதுவாழ்வு பெற்று தலை நிமிர்ந்துஓரளவிற்குப் படிப்படியாக முன்னேற முடிகிறது என்றால்அதற்குக் காரணம் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியைச் தோற்றுவித்த டாக்டர் சிநடேசனார்சர்.பி.டி.தியாகராயர்டாக்டர் டி.எம்.நாயர்சர்.பி.டி.இராசன்ஆர்க்காடு இரட்டையர் சர்..ஆர்முதலியார்சர்..எல்முதலியார்சர்.முகமது உஸ்மான்இரட்டைமலை சீனிவாசன்எம்.சி.இராஜாமீனாம்பாள் சிவராஜ்பொப்பிலி அரசர்சர்.ஆர்.கே.சண்முகம்சர்.எஸ்.முத்தையா முதலியார் போன்ற நூற்றுக்கணக்கான நீதிக்கட்சித் தலைவர்கள்தாம் என்பதை நல்லோர்கற்றோர்விஷயமறிந்தவர் நிச்சயம் அறிவர்.

குறிப்பாக டாக்டர் சிநடேசனார் மட்டும் பிறவாதிருந்தால்நாம் இன்று பெருமையுடன் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளும் வாய்ப்பே கூட ஏற்பட்டிருக்காது. 1912-ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் நம் மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக திராவிடர் இல்லம் (னுசயஎனையை ழடிஅநஅமைத்து நம்மவர்கள் தங்கவும்வசதிகளைப் பெறவும்நன்றாகப் படிக்கவும் உதவி புரிந்தவர் டாக்டர் சிநடேசனார்தான்அந்தக் காலத்தில் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்து படிக்கும் பார்ப்பனர்களுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லைநம்முடைய மாணவர்கள்தான் தங்குவதற்கு இடமோஉணவோ வழியில்லாமல் திண்டாடினர்எப்படியோ நாடாண்ட நாயகர்களை வஞ்சித்துஅரசு செலவில் வசதிகளைப் பெற்றுவேதப் பாடசாலைகளை ஏற்படுத்திக் கொண்டு கல்வி பயிலும் வாய்ப்பை உண்டாக்கிக் கொண்டே வந்தேறிகள்ஆட்சியில் யார் இருந்தாலும் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பைத் தொடர்ந்து நிலையாகப் பெற்று வந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மைபார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் படிக்கவும் கூடாதுஓதுவதைக் கேட்கவும் கூடாது என்ற மனுநீதிச் சட்டம் அவர்களுக்குத் துணையாகபாதுகாப்பு கேடயமாக அமைந்து விட்டதுபிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பார்ப்பனன்அவன் இரு பிறவி (துவிஜாஅவனுக்கு மட்டுமே பூணூல் அணியும் உரிமை உண்டுமற்றவர் எல்லாம் பிரம்மாவின் தோளிலும்தொடையிலும்பாதத்திலும் பிறந்தவர் என்றே மக்கள் நம்பினர்.

பிரம்மா ஆணாபெண்ணாஅதெப்படி பிரம்மாவிற்கு உடல் முழுவதும் குழந்தை பிறக்கும்இதைப் பற்றி எவருமே சிந்திக்கவில்லைகேள்வி எழுப்பவும் இல்லைஇப்போது உள்ள பார்ப்பனர்கள் எங்கே பிறக்கிறார்கள்எப்படிப் பிறக்கிறார்கள் என்பதைப் பார்த்த பின்னரும் கூடபார்ப்பனர்களை உயர் சாதியினர் என்று மற்றவர்கள் நம்பும் நிலைதானே உள்ளதுஇந்தியத் துணைக் கண்டம் விடுதலை பெற்ற பின்னரும் கூட இந்துச் சட்டம் தானே அரசின் ஆதரவைப் பெற்று விளங்குகிறதுஅரசமைப்புச்  சட்டப்படி இந்துக்களில் இரு பிரிவுகளையே நீதிமன்றம் ஏற்கிறதுஒன்று - பார்ப்பனர்மற்றவர் - எல்லோரும் சூத்திரர்கள்முஸ்லிம்களுக்கு வேறு சட்டம்கிறித்தவர்களுக்கு வேறு சட்டம்இருந்தும் எல்லோரும் இந்தியர்கள்சமநிலை பெற்றவர்கள்சம அந்தஸ்து பெற்றவர்கள் என்று பாமர மக்கள் நம்பும் நிலைதானே நீடிக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 100-க்கு 97 பேரான மண்ணின் மைந்தர்கள் அவதிக்குள்ளாகித் தவித்தபோதுதான்டாக்டர் நடேசனார்நாமெல்லாம் திராவிடர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார்முதன்முதலில் சென்னை ஒற்றுமைக் கழகம் (ஆயனசயள ருவைநன டுநயபரநஎன்ற அமைப்பைத் தானே முன்னின்று அமைத்தார்பின்னர் அதனை திராவிடர் சங்கம் (னுசயஎனையை ஹளளடிஉயைவடிஎன்று துணிந்து பெயர் மாற்றம் செய்தார்ஆண்டுதோறும் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேறிப் பட்டம் பெற்ற பார்ப்பனரல்லாத பட்டதாரிகளைக் கூட்டிவிருந்தும் பாராட்டும் வழங்கிஅப்போதே இன உணர்வை ஊட்ட முற்பட்டார்.

சர்.பிட்டிதியாகராயரும்டாக்டர் நாயரும் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்து உண்மையாகப் பாடுபட்டு வந்த காலகட்டத்தில் இருவருமேகாங்கிரசு பார்ப்பனரின் நலத்திற்காகப் பாடுபடும் அமைப்பு என்ற உண்மையை உணர்ந்து வெளியேறினர்.

ஆனால்பொதுத்தொண்டில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம் குறையவில்லைநகரில் பல பெரிய அமைப்புகளில் இருவரும் பல ஆண்டுகாலம் உழைத்து மக்களின் அன்பைப் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்சென்னை நகர சபையில் இருவருமே நல்ல திட்டங்களைத் தீட்டி அமலுக்குக் கொண்டு வந்தார்கள்இருந்தும் அவர்கள் இருவருக்கும் இடையே பூசல் இருந்து வந்தது.

இதையெல்லாம் கவனித்து வந்த டாக்டர் நடேசனார் திராவிட இன நலம் மேலும் பாதிக்கப்படக் கூடாதே என்ற வேதனை கொண்டு இருவரையும் எப்படியாகிலும் இணைத்துஇருவரின் ஆற்றலையும் திராவிட இன நலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார்இருவரையும்பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகளைப் பாராட்டும் விழாவில் கலந்து கொள்ளச் செய்தார்.

டாக்டர் சிநடேசனாரின் இந்த முயற்சியின் பயனாகதிராவிடர் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதுதிராவிடர் இல்லத்திற்கு கிழமைதோறும் பேராசிரியர் சுவெங்கடரத்தினம்திரு.வி.போன்ற அறிவாளிகளை அழைத்துப் பேச வைத்தார்.
இந்த இல்லம்சென்னை - திருவல்லிக்கேணியில் டாக்டர் சிநடேசனார் இல்லத்தின் எதிரிலேயே இயங்கியது.

இத்தனைக்கும்அவர் எவரிடமும் கையேந்திப் பணம் கேட்டதில்லைஎல்லாச் செலவுகளையும் அவரே ஏற்றார்அப்படியே அவர் மற்றவர்களிடம் கையேந்தி இருந்தால்அந்தக் காலத்தில் யார்தான் உதவியிருக்க முடியும்தன்னைப் பற்றிதன் தாயகத்தைப்பற்றிதன் இனத்தைப்பற்றிமுதன்முதலில் சிந்தித்தவர்அவர்தான் உண்டுதன் குடும்பம் உண்டுதன் உறவினர் உண்டு என்று அவரால் இருக்க முடியவில்லைதான் பிறந்தது தனக்காக அல்லபிறர் நலனுக்காக என்று முதன்முதலில் நினைத்த திராவிடத் தலைவர் நடேசனார்அவர்தான் நம் திராவிடர் இயக்கத்தின் வித்து என்பதைப் பெரும்பாலோர் இன்று உணர்ந்திடும் நிலை இல்லைஇன்று திராவிடர் பெற்றிருக்கும் முன்னேற்றத்திற்கு அவர்தான் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்பது இன்றைக்குப் பலர் அறிய முடியவில்லைஅந்த அளவுக்கு அவருடைய தன்னலமற்ற சேவை வரலாற்றில் இடம் பெறாது போயிற்று.

அவரும் தன் பெயருக்காகவோபுகழுக்காகவோவிளம்பரத் திற்காகவோ ஏதாவது செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமலே தியாக வாழ்வு வாழ்ந்து தன் வாழ்வை முடித்துக் கொண்டார்திராவிடர்களுக்கு என்று ஓர் அமைப்பை உண்டாக்கிதிராவிடர்களுக்கு விழிப்பு உணர்வினை ஏற்படுத்தி ஆரியர்களுக்கு எதிராக அமைதிப் புரட்சியை உண்டாக்கியவர் டாக்டர் சிநடேசனார்நீதிக்கட்சி தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர் அவர்பல நூற்றாண்டு காலமாக வந்தேறிகள் வஞ்சகம்சூதுதந்திரம் புரிந்து தங்களின் வாழ்வில் பொலிவையும் முன்னேற்றத்தையும் வளர்த்துக் கொண்டே வந்த அடாத செயலுக்கு முதன்முதலில் முற்றுப்புள்ளி வைத்தவர் டாக்டர் சிநடேசனார்.

இன்று திராவிடர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிபல பதவிகளைப் பெற்றுபொலிவுடன் வாழ்வதற்கு வழி வகுத்தவர் அவர்.

திராவிட மாணவர்கள் கல்வி பயில வசதிகளை உண்டாக்கியவர் அவர்.

தமிழ்த் தென்றல் திரு.வி.அவர்கள்நடேசனாரை மனிதருள் மாணிக்கம் என்று மனம் திறந்து புகழ்ந்திருக்கிறார் என்றால்நடேசனார் எந்த அளவிற்கு அற்புதமாக மக்களுக்குச் சேவை செய்திருக்க வேண்டும் என்பதை நாம் அறிய முடியும்.

சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகே சின்னகாவனம் என்ற சிற்றூரில்தான் டாக்டர் நடேசனாரின்  முன்னோர் வாழ்ந்தனர்அவர்கள் சென்னைக்குக் குடியேறிதிருவல்லிக்கேணிபெரிய தெருவில் குடியிருந்தனர்அவருடைய தந்தை திருகிருஷ்ணசாமி முதலியார் ஆவார்அவர் பொன்னேரி முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்டாக்டர் நடேசனார் 1875-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பிறந்தார்இவருடைய சிறிய தகப்பனாரின் புதல்வர்தான் புகழ்பெற்றதிவான்பகதூர் சி.தாதுலிங்க முதலியார்அவர் 1942-43-ஆம் ஆண்டில் நகரசபை மேயராகவும் பதவி வகித்தவர் ஆவார்.

டாக்டர் நடேசனார் இளமைப் பருவத்தில் திண்ணைப் பள்ளியில்தான் கல்வி கற்கச் சேர்க்கப்பட்டார்அந்தப் பள்ளி தெலுங்கு மொழியில்தான் பாடங்களைப் பயிற்றுவித்ததுஅதனால் அவர் உயர்நிலைப் பள்ளியிலும்கல்லூரியிலும் தெலுங்கு மொழியை விருப்பப் பாடமாகக் கற்க வேண்டியதாயிற்றுசென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துடு..ளு., பட்டத்தைப் பெற்று தொழில் நடத்த முற்பட்டார்.

அந்தக் காலத்தில் அவர் நகரத்தில் பெரிய மருத்துவர்எப்படிப்பட்ட வியாதிக்கும் நல்ல மருந்து கொடுத்துஅன்பாகக் கவனித்து மக்களிடம் பேரும்புகழும் பெற்றார்இருந்தும் என்னஅவர் பணத்தின் மீது குறிக்கோள் கொள்ளவில்லை.

ஏழைகளுக்கும்பணம் இல்லாதவர்களுக்கும் அவரே தன் பணத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கித் தந்து மனித இதயம் படைத்த டாக்டராக விளங்கினார்.
வறுமையாலும்பிணியாலும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களைக் கவனித்த பிறகு தான்பணக்காரர்களைக் கவனிப்பது அவர் கடைபிடித்த பழக்கமாகும்அவர் மருத்துவத் தொழில் செய்ய முற்படுவதற்கு முன்பித்தாபுரம் மகாராஜா கல்லூரியில் விரிவுரையாளராகக் குறுகிய காலம் பணியாற்றினார்நல்ல ஆங்கிலப் புலமை பெற்ற விரிவுரையாளர் என்ற பெயரையும் பெற்றார்அப்படியே அவர் அத்தொழிலில் நீடித்திருந்தால் நீதிக்கட்சியும் தோன்றியிருக்காது , திராவிடர் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்காது என்றே கூற வேண்டும்ஆசிரியர் பணியும் சிறந்ததுதான்ஆனால்அவருடைய ஆற்றலுக்கும்அறிவிற்கும்நாட்டுப் பற்றுக்கும் அது பொருத்தமானதல்லபிறரிடம் அன்பு செலுத்தும் பண்பும்ஆதரவளிக்கும் குணமும் அவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்ததுஎவரிடமும் தோழமை கொண்டாடிப் பழகும் உயர்ந்த குணம் பெற்றிருந்தார்பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் எது பேசினாலும் அமைதியுடன் கேட்டுக் கொள்ளும் நற்பண்பு அவரிடம் குடிகொண்டு விட்டது.

சென்னை நகரில் வாழ்ந்து வந்த ஏழைகள்சேரிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் குறிப்பாக - மீனவர்கள்தொழிலாளர்கள் அவரைக் கண்கண்ட தெய்வம் என்றே மதித்து வணங்கி வந்தனர்சிபாரிசுக் கடிதங்களைக் கேட்டவுடன் வழங்கியவர் அவர்தன்னுடைய தொலைப்பேசியை எல்லாருக்கும் பொதுவுடைமையாக்கியவர்!

தான் பிறந்த திராவிடர் சமுதாயத்தின்அன்றைய அரசியல்சமூகபொருளாதார நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருப்பதை அவர்தான் முதலில் கண்டார்எப்படியும் தன் இன நலனுக்காக அனைத்தும் செய்திட வேண்டும் என்று முதன்முதலில் எண்ணியவர் அவர்திராவிட மக்களின் எதிர்கால நல்வாழ்விற்கு வழிகோலும் முறையில் திராவிடர் இல்லம்திராவிடர் சங்கம் (னுசயஎனையை ஹளளடிஉயைவடிஅமைத்தார்பார்ப்பனர்களுக்கு எதிராகதிராவிடர்களின் பாதுகாப்பு அறக்கூடமாக முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளே பிற்காலத்தில் நீதிக்கட்சி தோன்றவும்திராவிடர் இயக்கம் உறுதியாக வேர் விட்டுஆல் போல் வளரவும் அடிப்படைக் காரணமாகி இருப்பதை நம்மால் இப்போது அறிய முடிகிறது.

திரு.வி.அவர்கள் தனது வாழ்க்கைக் குறிப்பு நூலில் நடேசனாரின் முயற்சியைப் பாராட்டி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1912ஆம் ஆண்டு திராவிடர் சங்கத்தின் மூலமே தனக்கும்டாக்டர் நடேசனாருக்கும் நட்பு உண்டாகியது என்றும்சங்கத்தின் சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடைபெற்றது என்றும்சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்பொது உடைமைஅறிவியல் குறித்தும்எல்.டிசாமிக்கண்ணுப்பிள்ளை ஜோதிடம்கணிதம் முதலிய பொருள்கள் குறித்தும்திரு.வி.தமிழ் இலக்கியம் பற்றியும் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆந்திரச் சகோதரர்கள் எக்கட்சியில் இருப்பினும்ஒன்று கூடித் தெலுங்கர் நலம் பேண அந்தக் காலத்தில் சர்.பிட்டி.தியாகராய செட்டியார் அவர்களின் முயற்சியால் ஆந்திர மகாசபை நிறுவப்பட்டது போன்றுதமிழர் நலம் காக்க டாக்டர் நடேசனார் திராவிடர் சங்கம் தொடங்கிதமிழர் நலம்பற்றி மட்டுமல்லாது திராவிட மொழிகளைப் பேசும் அனைவரின் நலனையும் பாதுகாத்திட முனைந்தார் என்பது நமக்குப் பூரிப்பும்பெருமதிப்பும் தருகிறதல்லவாதிராவிடர் இனத்தவர் எல்லோரையும் ஒரே குடும்பமாக எண்ணிய முதல் தமிழன் டாக்டர் நடேசனார்!

ஆண்டுதோறும் விழா எடுத்துபட்டதாரிகளை விருந்துக்கு அழைத்துஅவர்களுக்குத் திராவிட இன உணர்ச்சியையும்வீரத்தையும் ஊட்டியவர் டாக்டர் நடேசனார்!

1914-ஆம் ஆண்டு முதல் உலகப் போர் மூண்டதுஅதில் பிரிட்டிஷ் அரசு பங்கு கொள்ள வேண்டியதாயிற்றுபோர் 1918-ஆம் ஆண்டு முடிந்து பிரிட்டிஷ் அரசுக்கு வெற்றியைத் தேடித் தந்ததுஅப்போரில் ஆள் பலத்தையும்நிதி உதவியையும் செய்தவர் பார்ப்பனரல்லாதார்பார்ப்பனர்கள் வெள்ளையரை மிலேச்சர் என்றும்அவர்களின் ஆங்கில மொழியை மிலேச்ச பாஷை என்றும் தான் முதலில் கூறி வந்தனர்பின்னர் அவர்களே ஆங்கிலத்தை எளிதில் முதன் முதலாகப் பயின்று பதவிகளையும்வேலை வாய்ப்புகளையும் அதிகப்படியாகப் பெறலாயினர்வேதம் ஓதுதலையும்ஓதுவித்தலையும் குலத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் படிப்படியாக அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையைப் பெற்றனர்.

உலகப் போரில் ஒத்துழைப்பு தந்த இந்தியர்களுக்குக் கைமாறாக அரசு நிருவாகத்தில் மேலும் அதிகமாகப் பங்கு தர வெள்ளையர் ஆட்சி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்ததுஅந்த அறிவிப்பு இந்திய அரசின் தனிக் கெஜட்டில் வெளியிடப்பட்டது.

வெள்ளையர்கள் முழுக்க முழுக்க அதிகாரப் பொறுப்பைத் தங்கள் வசம் கொண்டிருந்த காலத்திலேயே பார்ப்பனர்கள் ஆதிக்கமும்செல்வாக்கும் பெற்றிருந்தனர் என்றால்இந்தியர்களிடம் மேலும் அதிக அதிகாரங்கள் வழங்கப்படுமானால்பார்ப்பனரல்லாதாரின் நிலை என்னவாகும் என்பதை டாக்டர் நடேசனார் சிந்தித்தார்.

அதுமட்டுமல்லஅதுவரை வெள்ளையர் ஹும் துரையால் தொடங்கப்பட்ட காங்கிரசு மகாசபையில் பார்ப்பனர்கள் செல்வாக்குப் பெற்றுகாங்கிரசு என்றால் அது பார்ப்பனர் நலம் பெருக்கும் அமைப்பாக வலுப்பெற்று வரத் தொடங்கியது.

சர்பிட்டிதியாகராயரும்டாக்டர் டி.எம்நாயரும் காங்கிரசில் பெற்ற பாடமும் அதுவே.

எனவேஉலகப் போருக்குப் பிறகுஅதன் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்த பார்ப்பனரல்லாதாரின் எதிர்காலம் இருண்டு விடும் என்பதை அவர்களும் உணரத் தொடங்கினர்.

திராவிடத் தலைவர்கள் தாங்கள் பெற்ற அனுபவ முதிர்ச்சியின் காரணமாகதிராவிடரின் எதிர்காலம் பற்றி அச்சமுற்றுஎப்படியும் பார்ப்பனரல்லாத மக்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற ஏக்கத்துடன் சிந்திக்கலானார்கள்அதற்குத் தன்னால் இயன்ற முழு முயற்சியைக் கொண்டுதியாகராயரையும்டாக்டர் நாயரையும் இணைத்து திராவிடர்களுக்காக 20.11.1916-இல் ஏற்படுத்திய அமைப்பே தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சியாகும்ஏகபோக உரிமையுடன்எதிலும் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்கள் நீதிக்கட்சியின் எழுச்சியைக் கண்டு அஞ்சினர்திகைப்பு அடைந்தனர்.

நீதிக்கட்சியானது உத்தியோக வேட்டைக் கட்சி!

            வகுப்புவாதக் கட்சி!
            வெள்ளையருக்கு வால்பிடிக்கும் கட்சி!
            பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் கட்சி!
            தேச விரோதக் கட்சி!

இப்படி எல்லாம் இட்டுக் கட்டிப் பழி சுமத்திப் பிரச்சாரம் செய்ய முற்பட்டனர் பார்ப்பனர்கள்அவர்கள் வசமே தின ஏடுகளும் இருந்தனதிராவிட இனத்தவரே கூட பார்ப்பனர்களின் தேசிய மாய வலையில் சிக்குண்டுஅவதூறும் கேலியும் பேசி வந்தனர்சென்னை மாகாணச் சங்கம் என்ற ஓர் அமைப்பைப் பார்ப்பனர்கள் உருவாக்கிதிருகேசவப் பிள்ளைபெரியார்திரு.வி.போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்களை அந்தப் போலி அமைப்பில் சிக்க வைத்து நீதிக்கட்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கனவு கண்டனர்.

டாக்டர் நடேசனார் தென்னகம் முழுவதும் நடைபெற்ற பார்ப்பனரல்லாத மாநாடுகளில் முக்கியப் பங்கேற்றுபார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திஎதிரிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துபார்ப்பனர் அல்லாத மக்களிடையே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினார்எதிரிகளின் குற்றச்சாட்டுகளைத் தூள் தூளாக்கி உண்மையை மக்களுக்குப் புரிய வைத்தார்திராவிடர்களிடையே எழுச்சியும்புத்துணர்ச்சியும்ஊக்கமும்இன உணர்வும் உண்டாக்க அரும்பாடுபட்டார் டாக்டர் நடேசனார்.

திராவிடர்களின் உண்மை நிலையை உலகறியச் செய்த உத்தமர் அவர்!

நீதிக்கட்சியை ஆரம்பத்திலேயே அழித்துவிட வேண்டும் என்று பார்ப்பனர்கள் தீட்டிய திட்டங்களைத் தகர்த்து எறிந்தவர் அவர்!

காங்கிரசின் மறைமுக ஆதரவோடும்பார்ப்பனர்களின் முழு ஆதரவுடனும் உருவாக்கப்பட்ட சுயராஜ்யக் கட்சியும்அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் கட்சியும் கொண்ட கோலமும்ஆடிய ஆட்டமும் தோல்வியடையச் செய்தவர் அவர்அன்னிபெசன்ட் அம்மையாரின் இண்டியன் பேட்ரியட்நியூ இண்டியா ஏடுகள் நீதிக்கட்சியைத் தாக்கியும்பார்ப்பனர்களை ஆரிய இனத்தவர்ஆரிய தர்மத்தினர் என்று புகழ்ந்தும் எழுதினபார்ப்பனர்களைக் கண்டு அகமகிழ்ந்த அம்மையார் திராவிடர் தலைவர்களைக் கண்ணால் காணக் கூட வெறுத்தார்.

இந்தியச் சீர்திருத்தச் சட்டத்தைப்பற்றி இந்தியர்களின் கருத்தை அறிய ஆங்கிலேய ஆட்சி விரும்பியதுபார்ப்பனரல்லாதார் சார்பாகப் பல தலைவர்கள்பல குழுக்களாகப் பிரிந்துஅந்தச் சட்டத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு என்று தனியாகத் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றால், 100-க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களே ஆட்சியைக் கைப்பற்றும் நிலை ஏற்படும் என்பதை வெள்ளையரிடம் வலியுறுத்தினர்அப்போது சிறந்த அறிவாளிகளாக விளங்கிய டாக்டர் நாயர்தியாகராயர்இராமசாமி முதலியார்டாக்டர் சிநடேசனார்.தணிகாசலம் செட்டி ஆகியோர் கடுமையாக உழைத்துபுள்ளி விவரங்களைச் சேகரித்துதிறம்பட வாதாடி வெற்றி கண்டனர்நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்னரேபல ஆண்டுகளாக திராவிடர் நலம் பற்றி ஆய்ந்து ஆவன செய்த நடேசனாருக்கு திராவிடர் இயக்கம் என்றும் கடமைப்பட்டதாகும்ஆனால்பிற்காலத்தில் டாக்டர் நடேசனாருக்கோடாக்டர் நாயருக்கோ எந்த விழாவும் எடுக்கப்படவில்லைஅவர்கள் நினைவாக சிலைகூட வைக்கப்படவில்லைஉழைத்த உத்தமர்களை நாடு மறந்து விட்டது!

அவர் பல ஆண்டுக் காலம் நகர மன்றத்தில் உறுப்பினராக இருந்து ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மலிந்துவிட்ட சுகாதாரக் கேடுகளை அகற்றினார்அவர் பலமுறை போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்பட்டார்ஒருமுறை 1924-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேடித் தேடி பிகந்தசாமி செட்டியார் என்பவரை நிறுத்தினர்வீண் முயற்சி வேண்டாம் என்று திரு.வி.காங்கிரசு மேலிடத்திற்குகுறிப்பாக சீனிவாச அய்யங்காருக்கு வேண்டுகோள் விடுத்தார்அந்தத் தேர்தல் முடிவு சீனிவாச அய்யங்காரையே திகைப்படையச் செய்து விட்டதுபார்ப்பனர்கள் கூட பெருமளவு டாக்டர் நடேசனாருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

1920-இல் சென்னை சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் கூட டாக்டர் நடேசனாரே எல்லோரையும் விட அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

நாட்டின் சுதந்திரத்திற்காகக் காங்கிரசு தலைவர்கள் பாடுபட்டு ஓங்கி வளர்ந்திருந்த காலத்தில் டாக்டர் நடேசனார் மட்டும் எப்படிப் போட்டியின்றியும்அதிக வாக்குகள் பெற்றும் வெற்றி பெற முடிந்தது என்பதை நடுநிலையாளர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, 1921-ஆம் ஆண்டிலிருந்தே பார்ப்பனர் அல்லாதோருக்காக வகுப்பு நீதி கோரி சட்டமன்றத்தில் தீர்மானங்களைக் கொண்டு வந்து பேசும்போதெல்லாம் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்தைக் கடுமையாகக் கண்டித்த டாக்டர் நடேசனார் எப்படிப் பெருவாரியான வெற்றியும்பார்ப்பனர்களின் ஆதரவையும் கூட பெற முடிந்தது என்று கண்டறிந்தால்அவருடைய தனிப்பட்ட குணநலன்கள் பற்றி தெளிவாகக் கண்டறிய முடியும்.

அவரிடம் உதவி கேட்டு யார் வந்தாலும் எல்லாருக்கும் இயன்ற உதவியைச் செய்து வந்தார்திரு.வி.காங்கிரசு இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தும்நீதிக்கட்சியைக் கடுமையாக எதிர்த்து வேலை செய்து வந்த காலக் கட்டத்தில்கூட அவருக்குப் பலமுறை டாக்டர் நடேசனார் உதவி புரிந்திருக்கிறார் என்பதை திரு.வி..வின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் படித்து அறிகிறோம்உதவி புரிவதில் அவர் குறுகிய கண்ணோட்டம் செலுத்தியதில்லைஅவர் அந்தக் காலத்தில் சிறந்த பரோபகாரியாக - நீதிக்கும்நேர்மைக்கும் கட்டுப்பட்டவராக - பிறர் நலனுக்காகவேகுறிப்பாக முஸ்லிம்கள்கிறித்தவர்கள்தொழிலாளர்கள்மீனவர்கள்தாழ்த்தப்பட்ட மக்கள்முதியோர்கள்பிணியால் பீடிக்கப்பட்டவர்கள் ஆக எல்லாருக்கும் தெய்வமாக விளங்கினார்தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள்வேண்டியவர்கள் - வேண்டாதவர்கள் என்ற பாகுபாட்டிற்கே அவர் இடம் கொடுக்கவில்லை.

அதனால்தான் அவரை மக்கள்தலைவராக மதித்தனர் என்பதை அறியலாம்இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் அவரால் நீதிக்கட்சி பயன் பெற்றதே தவிரநீதிக்கட்சியால் அவர் தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை.

அவர் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்தோல்வியைப் பற்றியோஏமாற்றம் பற்றியோ அவர் எதிலும் நம்பிக்கை இழத்தல் கூடாது என்பது அவரின் கோட்பாடு.
அவரைப் பற்றி பிறர் கூறியுள்ள சில கருத்துகளை ஆராயும்போதுநாம் எப்படிப்பட்ட தலைவரை பெற்றிருந்தோம் என்ற உண்மையை அறிய முடிகிறது.

உலகில் பிறந்த மக்கள் யாவரும் கடவுளின் புதல்வர்களேமக்கள் யாவரும் ஏற்றத் தாழ்வற்றவரும்சமமானவருமாவர் என்ற பரந்த கொள்கையை உடைய வராயிருந்தார் என்று சுரேந்திரநாத் ஆர்யா டாக்டர் நடேசனாருக்கு புகழாரம் சூட்டியிருப்பதில் இருந்து நாம் எப்படிப்பட்ட தலைவரை நமது இயக்கத்திற்குப் பிதாவாகப் பெற்றிருந்தோம் என்பது தெளிவுபடுகிறது.

மனித சமுதாயத்திலேயே புறக்கணிக்கப்பட்டும்கவனிக்கப்படாமலும்வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களுக்குத் தொண்டு புரிவதையே தம் பிறவிப் பயனாகக் கொண்டிருந்தார் என்று சர்எம்.கிருஷ்ணன் நாயர் குறிப்பிட்டிருப்பதிலிருந்து தாழ்ந்த திராவிடத்தைத் தட்டி எழுப்பிடும் ஆற்றல் மிக்கவரை நாம் பெற்றது புலப்படும்.

தரித்திரமும்ஏழ்மையும் உருக்கொண்டு அல்லல்படும் ஒரு மனித சமுதாயத்தினருக்காகவே நடேச முதலியார் வாழ்ந்தார் என்று சர்முகமது உஸ்மான் கூறியிருப்பதிலிருந்து நம்மால் டாக்டர் நடேசனாரின் இலட்சிய வாழ்க்கையைப் பற்றி அறிய முடிகிறது.

சாதிமத வேறுபாடுகளை கடந்து அன்பு என்னும் ஒளியானது தன்னைச் சுற்றி சுடர்விட்டுப் பிரகாசிக்கும்படி செய்தவராவார் என்று திருசர்.சின்னசாமி அய்யங்கார் குறிப்பிட்டிருப்பதிலிருந்து ஆழமான கருத்தை நாம் அறிய முடிகிறது.

காந்தியை மகாத்மாஅவதார புருடர் என்றெல்லாம் மக்கள் பேசுவது போல்நடேசனாரையும் ஒரு மகாத்மாவாக மக்கள் மதித்துப் பேசினர்.

நடேசனாரைப் போல் பிராமணரல்லாதாரின் மனதைப் பெருமளவு கவர்ந்தவரும்பிராமணர்களின் வெறுப்பைச் சிறிதளவே தேடிக் கொண்டவரும் - ஜஸ்டிஸ் கட்சியில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள் என்று திருவாசகமணி கே.எம்பாலசுப்பிரமணியம் தென்னாட்டு பிரமுகர்கள் என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை காணும் போது திராவிடர்களுக்கு வாய்த்த உண்மையான மகாத்மா டாக்டர் நடேசனார் தான் என்பது அய்யமின்றித் தெளிவாக விளங்குகிறது.

நீதிக்கட்சியின் தூணாக விளங்கிய டாக்டர் டி.எம்நாயர், 1918-ஆம் ஆண்டு இலண்டன் சென்று திராவிட மக்களின் நிலையை உணர்த்திசட்டமன்றத் தேர்தலில் இடஒதுக்கீடு பார்ப்பனர் அல்லாதாருக்கு வேண்டும் என்று வலியுறுத்தச் சென்றபோதுநான் திரும்பி வரும் வரையில்ஜஸ்டிஸ் கட்சியை உங்களிடம் ஒப்படைத்து செல்கிறேன்நீங்கள்தான் கட்சியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நடேசனாரை கேட்டுக் கொண்டார் என்ற செய்தி கட்சியின் நாளேடு ஜஸ்டிஸ் ஏட்டில் காணப்படுகிறதுஇதிலிருந்து டாக்டர் நடேசனார் எந்த அளவிற்கு அறிவாற்றல் மிக்கவராகக் கட்சியைப் பாதுகாத்திடும் ஆற்றல் மிக்கவராக இருந்திருக்கிறார் என்பது புலப்படும்கட்சி வாழ்கிறது என்றால்திராவிடர் வாழ்கிறார்கள் - கட்சி வீழ்ந்துவிட்டால் திராவிடம் அழிந்து விடும் என்பதை மக்களுக்கு உணர்த்தியவர் அவர்.

நீதிக்கட்சியின் தலைவர்கள் சிலர் இவருடைய செல்வாக்கைக் கண்டுஅவரைப் புறக்கணிக்கும் காலக் கட்டமும் பிறந்ததுஅவருக்கு அமைச்சர் அவையில் எந்தப் பதவியும் தரப்படவில்லைமாநகராட்சியில் அவர் ஒரு முறை கூட நகரத் தந்தையாக வர முடியவில்லை.

அந்த நிலையில்கூட அவர் கட்சியிடம் கொண்டிருந்த உண்மையான பற்றைக் குறைத்துக் கொள்ளவில்லைஎதையும் தாங்கும் இதயத்துடன் கட்சியின் மேம்பாட்டிற்காக எப்போதும் போல உழைத்தார்ஒருமுறை அவர் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டுவெற்றிவாகை சூடினார்எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து அரசின் தவறுகளைத் துணிவுடன் சுட்டிக் காட்டினார்மக்களுக்கு மட்டும் மருத்துவராக இருக்கவில்லைகட்சிக்கும் அவர் மருத்துவராக இருந்தார்ஒரு சமயம் சட்டமன்றத்தில் சுயராஜ்யா கட்சியினர் இவரைப் பார்த்து நீங்கள்தான் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து விட்டீர்களேஎன்று கேலி பேசியபோதுஆம்நான் எதிர்க்கட்சியின் வரிசையில்தான் வந்து விட்டேன்ஆனால்என் கட்சியின் கொள்கையை விட்டுவிட்டு எதிர்க் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று பதிலளித்தார்.

நீதிக்கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்ட 1927-ஆம் ஆண்டு விருப்பமுள்ள ஜஸ்டிஸ் கட்சியினர் காங்கிரசு பேரியக்கத்தில் சேரலாம் என்று கோவையில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுபதவி வெறியர்கள் இப்படித் தீர்மானத்தை முன்மொழிந்த போதுஅதனைக் கடுமையாக எதிர்த்தவர் இருவர்நடேசனார் ஒருவர்சர்கே.விரெட்டி மற்றொருவர்வேல் பாய்ச்சப்பட்ட இதயத்துடன் தொடர்ந்து நீதிக்கட்சியிலேயே இருந்து தொண்டாற்றிதனக்கென ஒரு குழுவை உண்டாக்கிக் கொண்டவர் டாக்டர் நடேசனார்.

1926-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை பெறவில்லைஉதிரிகளைச் சேர்த்துக் கொண்டு அமைச்சர் அவை அமைக்கவும் பனகல் அரசர் விரும்பவில்லைஇருப்பினும் எதிரிகள் வியப்படையும் வண்ணம் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றடாக்டர் சுப்பராயனுக்கு நீதிக்கட்சி ஆதரவு அளித்ததுஅதுமட்டுமல்லஆட்சி உறுதியுடன் நிலையாகச் செயல்பட டாக்டர் நடேசனார்சுப்பராயன் அமைச்சர் அவையில் ஒரு பார்ப்பனருக்கு இடம் தரவேண்டும் என்று கூறிய யோசனையை சுப்பராயன் ஏற்றார்பார்ப்பனர்கள் கொட்டம் அடங்கியதுபனகல் அரசரின் இராஜதந்திரத்தையும்நடேசனாரின் இராஜ தந்திரத்தையும் நாம் வியந்து பாராட்டுதல் வேண்டும்.

நகரசபையில்...

டாக்டர் நடேசனார் பதவி வெறி பிடித்தவர் அல்லர்அவரைப் போல மக்களுக்கு இரவு பகலும் தொண்டாற்றியவர்வேறு யாரும் இல்லைஅவர் புரிந்தது பயன் கருதாத பணிதன் செல்வத்தை ஏழைகளுக்காகவே செலவழித்தார்மக்கள் எல்லோரும் அவரிடம் கொண்டிருந்த அன்பின் விளைவாகத் தான் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லைநாட்டில் காங்கிரசு பெற்றிருந்த செல்வாக்கு அவரைப் பொறுத்தவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லைதிரு.வி.போன்ற பழுத்த காங்கிரஸ் தலைவர்களே இந்த உண்மையை உணர்ந்து வெளிப்படையாகக் கூறியிருக்கின்றனர்.

நகரசபையில் அவர் பல சாதனைகளைச் செய்து காட்டினார்அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கும்தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர் நல்லது செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடன் பாடுபட்டார்.

நகரசுத்தித் தொழிலாளர் நாள்தோறும் சேகரிக்கும் குப்பைக் கூளங்களை ஒதுக்குப்புறப் பகுதிகளில்அதுவும் தாழ்த்தப்பட்டவர் வாழும் இடங்களில் கொட்ட வேண்டும் என்று சபை முடிவு செய்தபோதுஅந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று கடுமையாக எதிர்த்துப் பேசினார்சுகாதார வசதியற்றுபிணியால் அவதியுறும் மக்களை மேலும் வதை செய்வது இரக்கமற்ற செயல் என்று வாதாடினார்நகரசபை பணிந்து முடிவைக் கைவிட்டது.

நகரசபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்றுவிவாதங்களில் கலந்து கொண்டு மக்களின் மேன்மைக்காகவே நாள்தோறும் பாடுபட்டார்அவருடன் நகர சபையில் இருந்த நீதிக்கட்சித் தலைவர்கள்குறிப்பாக டாக்டர் நாயர்சர்தியாகராயர்.  இராமசாமி முதலியார் போன்றவர்கள் நிருவாகத் திறமை மிக்கவர்கள் இருந்தும்நடேச முதலியார் நகரசபையின் தலைவராக ஒருமுறை கூட வரமுடியவில்லைஅந்த அளவிற்கு நீதிக்கட்சித் தலைவர்கள் தரக் குறைவாக நடந்து கொண்டனர்நீதிக்கட்சியிலேயே அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது.

டாக்டர் நடேசனார் சென்னை சுகாதார நிறுவனத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தார்சென்னை சுகாதாரப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராக, 1927 முதல் 1937 வரை பணியாற்றினார்இந்த நிறுவனத்தின் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்தார்.

அவர் சுகாதாரம்மருத்துவத்துறையில் பெற்றிருந்த ஆற்றலின் காரணமாக, 1927-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கூட்டப்பட்ட கீழ்திசை மருத்துவர் மாநாட்டிற்கு (குயச நுயளவநச ஊடிபேசநளள டிக ஆநனஉயட ஆநபிரதிநிதியாக சென்னை நகரசபை அனுப்பி வைத்ததுஅவருடைய புத்திக் கூர்மையும்மருத்துவ அறிவையும் கண்டு அனைத்துப் பிரதிநிதிகளும் வியந்தனர் என்று 24.8.1938-இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் நடைபெற்ற படத் திறப்பு விழாவில் காங்கிரசு அமைச்சர் டாக்டர் டி.எஸ்.எஸ்இராஜன் பேசியிருப்பதில் இருந்து மாற்றாரின் மனதை அவர் எந்த அளவிற்குக் கவர்ந்துவிட்டவர் என்பது புலப்படும்.

அவர் மறைவிற்குப் பிறகு அவர் நினைவாகச் சிலை ஒன்று வைக்க வேண்டும் என்று பல தலைவர்கள் பேசினர்நகரசபைக்கு வேண்டுகோள் விடுத்துத் தீர்மானம் நிறைவேற்றினர்ஆனால்இதிலும் அவருக்கு மதிப்பும்மரியாதையும் தரப்படவில்லைஆம்இந்த நாள் வரை!

உண்மையாகத் தொண்டாற்றுபவர்களுக்குநீதிநேர்மையுடன் கடமையைச் செய்பவர்களுக்குதன்நலம் கருதாதுஎப்போதும் ஊருக்கு உழைப்பவர்களுக்குநம் சமுதாயத்தில் இப்படி ஒரு நிலை நீடிப்பதும்நன்றியை மறப்பதும்ஒருவர் இறந்துவிட்ட பிறகும் கூட உட்பகையும்பொறாமையும் கொண்டு செயல்படுவதும் நமக்குச் சாதாரணமாகி விட்டதுதிராவிடர் இயக்கத்தின் சிற்பிகளான டாக்டர் டி.எம்நாயருக்கோடாக்டர் நடேசனாருக்கோ நினைவுச் சின்னம் எழுப்பப்படாதிருப்பது நமது வரலாற்றில் பெரிய குறையாகவே நீடிக்கிறது.


நூல் - திராவிடத் தந்தை டாக்டர் சி.நடேசனார்

ஆசிரியர் - ஏ.எஸ்.வேணு



Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!